குட் பேட் அக்லி பட வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் இவர் தான் - நெகிழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் தாஸ் பகிர்ந்த தகவல்
குட் பேட் அக்லி படத்தின் வெற்றி விழாவில் அர்ஜுன் தாஸ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே குட் பேட் அக்லி படம் தான். தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. அஜித்தின் பேன் பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
குட் பேட் அக்லி படம்:
அந்த அளவிற்கு படம் தாறுமாறாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வரியா நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒரு அடார் லவ் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் பிரியா வாரியார் இளசுகள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனார் என்று சொல்லலாம். இதுவரை படம் வெளியாகி உலக அளவில் 160 கோடிக்கும் மேல் வசூலை செய்திருக்கிறது.
படத்தின் வெற்றி விழா:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் விழா நடைபெற்று இருந்தது. இதில் குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருந்த நடிகர் அர்ஜுன் தாஸ்
விழாவில், எங்க இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. இன்று சுரேஷ் சந்திரா சார் நிக்கிற இடத்தில் தான் 11 வருடத்திற்கு முன்னாடி நான் இன்று இருந்தேன். இன்று இந்த இடத்தில் இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=-Gi-7iZ7jQY
அஜித் பற்றி சொன்னது:
அஜித் சார் 2013 இல் இருந்து என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர்தான் இந்த படத்துக்காக என்னை ஆதிக் இடம் சொல்லி இருக்கார். ஜாமி கதாபாத்திரத்தை நல்லபடியாக செய்ததற்கு பிரியாவுக்கு தான் நன்றி சொல்லி இருக்கிறேன். நான் அஜித் சாரோட எல்லா படத்தோட போஸ்டரையும் ஷேர் பண்ணுவேன். அப்படி ஒரு நாள் சுரேஷ் சந்திரா சார் எனக்கு கால் பண்ணி, ஆதிக் மீட் பண்ணனும்னு சொன்னார். போய் பாருங்கன்னு சொன்னார். அப்படித்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.
படத்தின் கதை:
படத்தில் அஜித் இந்தியாவே நடுங்கும் அளவுக்கு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். அந்த வேலையால்
அஜித்தினுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது. இதனால் திரிஷா மனம் உடைந்து தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தையை கூட பார்க்க விடாமல் திரிஷா தடுக்கிறார். இதனால் அஜித் போலீஸிடம் சரண்டர் ஆகி விடுகிறார். பின் 17 வருடம் கழித்து
தன்னுடைய கேங்ஸ்டர் தொழில் எல்லாம் விட்டுட்டு தன்னுடைய மகனை பார்க்க வருகிறார். அப்படி வரும்போது அஜித் உடைய மகனை அர்ஜுன் தாஸ் போலீஸ் இடம் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விடுகிறார். இதனால் நன்றாக இருந்த அஜித் மீண்டும் வில்லனாக மாறுகிறார். அர்ஜுன் தாஸ் ஏன் அஜித்துடைய மகனை ஜெயிலுக்கு அனுப்பினார்? அதற்கான காரணம் என்ன? தன் மகனை ஜெயிலில் இருந்து அர்ஜுன் மீட்டாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.