அர்ஜுன் தாஸின் 'பாம்' படம் சீறி வெடித்ததா? இல்லையா? படம் எப்படி இருக்கு - முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அர்ஜுன் தாஸ் திகழ்ந்து வருகிறார். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பாம். இந்த படத்தை இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் காளி வெங்கட், அபிராமி, நாசர், சிங்கம்புலி, பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை பாணியில் சமூக நீதியை சொல்லி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் மக்கள் இரண்டாகப் பிரிந்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் இவர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வு தான். ஏற்றத்தாழ்வை விடாப்படியாக வைத்துக்கொண்டு இருவரும் அடித்துக் கொள்கிறார்கள். அந்த கிராமத்தை சேர்ந்த பகுத்தறிவாளர் ஒருவர், இந்த பிரிவினையை நீக்கி கிராமத்திற்கு நல்லது செய்ய விரும்புகிறார். ஆனால், அவருடைய ஆசை நிறைவேறுவதற்கு முன்பே அவர் இறந்து விடுகிறார்.
பின் இரவில் கிராமமே ஒன்றுகூடி அவருடைய உடலை அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. அப்போது அந்த உடல் பாம் போடுகிறது. அதாவது அந்த உடலில் இருந்து வாயு வருகிறது. கிராம மக்கள் எல்லோருக்குமே ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே அவர் இறந்துவிட்டாரா? இல்லையா? என்ற குழப்பமும் வருகிறது. அந்த இந்த சூழலில் தான் ஊர் பூசாரி, அவருக்கு சாமி வந்திருப்பதாக சொல்லி ஊர் மக்களை நம்ப வைக்கிறார்.
ஊர் திருவிழாவிற்கு இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் நிலையில் இந்த பூசாரி சொன்னதால் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் அர்ஜுன் தாஸ் வழக்கமான ஆக்சன் பாணியில் நடிக்காமல் ஒரு அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் வரும் காளி வெங்கட் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
படத்தில் பெரும்பாலான நேரம் அவர் பிணமாக தான் நடித்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் நாசர், அபிராமி ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். மேலும், படத்தில் நிறைய புது நடிகர்கள் இருந்தாலும் சில பேருக்கு இன்னும் நடிக்கவே தெரியவில்லை என்று தான் சொல்லணும். மேலும், இயக்குனர் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் வகையில் கதையை கொண்டு சென்றிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் இயக்குனர் கொண்டு சென்று இருக்கிறார்.
இவர் இதற்கு முன்பு சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தை எடுத்திருந்தார். தற்போது இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தில் அவர் சொல்ல நினைக்கும் காட்சிகள் சொல்லி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. கதை வித்தியாசமாக இருந்தாலும் பிணத்தின் பின்னாடி இருக்கும் மர்மத்தை சொல்லும் விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்து இருக்கலாம். ஏற்றத்தாழ்வுகளால் மக்களுக்குள் ஏற்படும் விளைவுகளை இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலுமே ஒரு புது முயற்சியை இயக்குனர் கொடுத்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
நிறை:
ஒரு புது முயற்சியை இயக்குனர் கையாண்டு இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்
நடிகர்கள் நடிப்பு
கதைக்களம்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதை நேர்த்தியாக செல்கிறது.
குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்
புதுமுக நடிகர்கள் நடிப்பு
உணர்வுபூர்வமான காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் பாம் - புது முயற்சி