வெளியான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - தம்பி ராமைய்யா மகனின் நிச்சயதார்த்த வீடியோ

By Arun · 29/10/2023

உமாபதி- ஐஸ்வர்யா திருமணம் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது அர்ஜுன் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் நடித்தார். இருந்தாலும், இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். இருந்தாலும், ஐஸ்வர்யா சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

இந்த நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் திரைக்கு வர இருக்கும் ராஜகிளி என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார்.

அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. பல மாதங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

https://www.youtube.com/watch?v=sHLukdYP2w8

இந்நிலையில் இன்று உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம்நடந்துள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நண்பர்கள், உறவினர்கள் சூழ மிகவும் எளிமையாக இந்த திருமண விழா நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், திருமண தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற தம்பி ராமையா 'அர்ஜுன் சார் ஒரு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அந்த திரைப்படத்தை நடித்து முடித்ததுமே திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full