கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி தற்போது வரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து இருக்கிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி இருந்த லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருந்தது.

Advertisement

அர்ஜுன் குடும்பம்:

இதனை அடுத்து அர்ஜுன் அவர்கள் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

அர்ஜுன் மகள்:

அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் நடித்தார். இருந்தாலும், இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். இருந்தாலும், இவர் விடாமல் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபகாலமாகவே நடிகர் அர்ஜுன் அவர்கள் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். தன் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

இந்த நிலையில் தற்போது அர்ஜுன் பகிர்ந்திருக்கும் வீடியோக்கள் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, அர்ஜுன் அவர்கள் தன்னுடைய மனைவி, மகள்களுடன் சேர்ந்து தன்னுடைய பண்ணை வீட்டிற்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் தன்னுடைய மகள்களை வைத்து மாட்டு வண்டி ஓட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மாடு புதிதாக கன்று போட்டு இருக்கிறது. அவர்களுக்கு கிருஷ்ணா- ராதா என்று பெயர் வைத்து அந்த கன்று குட்டிகளுடன் அர்ஜுன் மகள்கள் கொஞ்சி விளையாடி இருக்கும் வீடியோவும் பதிவிடப்பட்டிருக்கிறது.

Advertisement

அர்ஜுன் மகள் திருமணம்:

மேலும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் திரைக்கு வர இருக்கும் ராஜகிளி என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது. கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement