அவ இல்லாம வீடே அமைதியா இருக்கிறது - ஸ்ருத்திகா கணவர் அர்ஜுன் பேட்டி

By Rajkumar · 10/10/2024

ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருத்திகா கலக்கி வரும் நிலையில், அவரது கணவர் அர்ஜுனின் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் தான் முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பழமொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.

தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இம்முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் சமீபத்தில் ஹிந்தி பிக் பாஸ் 18 தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை நடிகை ஸ்ருத்திகா ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த 'ஸ்ரீ' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஸ்ருத்திகா குறித்து:

அதற்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதற்குப் பிறகு இவர் தனியாக யூடியூப் சேனலை துவங்கி இருக்கிறார். இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

பிக் பாஸில் ஸ்ருத்திகா:

தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை ஸ்ருத்திகா பெற்று இருக்கிறார். இவரின் அடையாளமே வெகுளியான பேச்சும் குறும்புத்தனமும் தான். அதனால் முதல் நாளே இவர் தன்னுடைய சேட்டைகளால் சல்மான் கானை கவர்ந்தார். சமீபத்தில் கூட 'சும்மா' என்ற வார்த்தையை ஹிந்தி பிக் பாஸில் பேசி , யார் இந்த ஸ்ருத்திகா என ஹிந்தி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யும் அளவு இவர் மாறியுள்ளார்.

அர்ஜுன் பேட்டி:

இந்நிலையில் ஸ்ருத்திகா கணவர் அர்ஜுன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், ஸ்ருத்திகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன பிறகு நான் அவரை ரொம்ப மிஸ் பண்ணேன். ஆனால், ஒரு தமிழ் பெண்ணாக முதல் முதலில் ஹிந்தி பிக் பாஸில் அவர் பங்கேற்று இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான், உன் புருஷன் இன்னொரு வீடு வச்சிருக்காரா? என்று என்னை பற்றி கிண்டல் செய்தார்கள். அதேபோல் இப்ப பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்க புருஷன் பாலி போயிருப்பார் என்று கிண்டல் செய்கிறார்கள். என்னை பார்த்தால் அப்படியே தெரிகிறது என்று கேட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=bBdWYO8HRl0

எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க :

மேலும் அவர், ஸ்ருத்திகா எப்போதும் பேசிக்கொண்டே இருப்பாள். ஆனால், இப்போ வீடு அமைதியாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா 'சும்மா' என்ற தமிழ் வார்த்தையை யூஸ் செய்திருப்பார். சும்மா என்றால் ஹிந்தியில் கிஸ். ஆனால், அது ஸ்ருத்திக்காவுக்கு தெரியாது. இது தெரியாமல் அவர் பிக் பாஸ்க்கு விளக்கம் அளித்துள்ளார். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ தெரியவில்லை. உங்க சப்போர்ட் எப்பவுமே எங்களுக்கு வேண்டும். ஸ்ருத்திகாவுக்கு கண்டிப்பா ஓட்டு போடுங்க என்று அர்ஜுன் பேசியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full