நடிகர் அர்ஜுனின் மாமனார் பிரபல நடிகராம், அவர் யாருன்னு தெரியுமா?- வைரலாகும் புகைப்படம்

By subhashini · 26/2/2022

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆக்சன் கிங் அர்ஜுன் திகழ்கிறார். இவர் 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு 90ஸ் முதல் 2K கிட்ஸ் என அணைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக அர்ஜுன் இருந்து வருகிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் 90ஸ் காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன். 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனாலே அவருடைய படங்களை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். அதேபோல சுமார் 5க்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடியுள்ளார்.

நடிகர் அர்ஜுனின் திரைப்பயணம்:

தற்போது அர்ஜுன் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து அர்ஜுன் தற்போது 2 தமிழ் படங்களிலும், ஒரு மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் அர்ஜுனின் குடும்பம்:

இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது முதல் மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் நடித்தார். இருந்தாலும் இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் அர்ஜுன் குடும்பத்தில் துக்க சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

நடிகர் அர்ஜுன் மாமனார் காலமானார்:

அதுஎன்ன வென்றால், கடந்த வாரம் நடிகர் ராஜேஷ் என்கிற வித்யாசாகர் காலமானார். இவர் கன்னட சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் வேற யாரும் இல்லை, நடிகர் அர்ஜுனின் மாமனார். இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் நடிகர் ராஜேஷ் மரணமடைந்தார். இவரின் இழப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து அர்ஜுன் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

வைரலாகும் அர்ஜுன் மாமனாரின் புகைப்படம்:

அதில் அர்ஜுன் தன் மாமனாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கூறி இருப்பது, என் மாமனாரை மட்டும் நான் மிஸ் செய்யவில்லை. ஒரு சிறப்பான நடிகர், ஒரு சிறந்த மனிதன், என் அப்பாவின் நெருக்கமான நண்பரையும் மிஸ் செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அர்ஜுனனின் மாமனார் நடிகரா? என்று கேட்டு வருகிறார்கள். அதோடு ரசிகர்கள் அர்ஜுனுக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full