கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் அன்ஷிதாவுடன் ஜோடியாக பிக் பாஸ் சென்றுள்ள அர்னவ்
சர்ச்சை ஜோடி அர்னவ் மற்றும் அன்ஷிதா பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கும் செய்திதான் சோசியல் மீடியாவில் வரலாம் ஆகி வருகிறது. பிக் பாஸ் 8 தொடக்க விழாவில், போட்டியாளர் நடிகர் ரஞ்சித்தை விஜய் சேதுபதி வைத்து செய்ததுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. கடந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விளக்குவதாக சமீபத்தில் தனது instagram பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.
இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னர் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, வி ஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8:
அந்த வகையில் நேற்று போட்டியாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது. இந்த முறை போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றைக் கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபிக் கிடைக்கும் என விஜய் சேதுபதி அனைவரையும் வாழ்த்தி உள்ளே அனுப்பினார். அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு, பாய்ஸ் ஒருபுறம், கேர்ள்ஸ் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் முதல் வாரம் ஜாலியாக இருக்கும். சில சமயங்களில் முதல் வாரம் எலிமினேஷனும் இருக்காது. ஆனால் இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
Rytu..
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 6, 2024
Arnav & Ashitha in #BiggBoss now
pic.twitter.com/b1fS82D8qz
அர்னவ் - அன்ஷிதா:
இந்த முறை போட்டியாளர்களாக 'செல்லம்மா' சீரியலில் ஜோடிகளாக இணைந்து நடித்து வந்த அர்னவ் மற்றும் அன்ஷிதா கலந்து கொண்டிருக்கிறார்கள். அர்னவ் ஐந்து ஆண்டுகளாக நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அர்னவ், 'செல்லம்மா' சீரியலில் நடிக்க ஆரம்பித்தவுடன் அவரது முதல் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொண்டு மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக அர்னவ் மீது திவ்யா குற்றம் சாட்டினார். ஆனால், திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது நாம் அறிந்ததே.
திவ்யா வைத்த குற்றச்சாட்டு:
அதேபோல் தன்னை அர்னவ் கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டார் என திவ்யா தெரிவித்து இருந்தார். மேலும், அவர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோது தன்னை எட்டி உதைத்து, அடித்து சித்திரவதை செய்ததால் போலிஸ் நிலையத்தில் திவ்யா புகார் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து அர்னவ் தலைமுறைவாகி இருந்த நிலையில், போலீஸ் அவரை கைது செய்தது. பின்பு மீண்டும் வெளியே வந்து சீரியல் களில் நடிக்க தொடங்கினார்.
#Arnav wife and #Anshitha Leaked Audio 🤯❗#BiggBossTamil8 #BiggBossTamil #BiggBoss #BiggBoss8Tamil #VijaySethupathi #BiggBossTamilSeason8 pic.twitter.com/x3ewmOt62W
— Nobody Movie Updates 🍿 (@nobody45187) October 7, 2024
அன்ஷிதா குறித்து:
இதற்கு எல்லாம் காரணம் அர்னவுடன் செல்லம்மா சீரியலில் ஜோடியாக நடித்த அன்ஷிதா தான் என்று திவ்யா கூறியிருந்தார். அன்ஷிகா, திவ்யாவிடம் தகாத முறையில் பேசிய ஆடியோ ஆதாரங்கள் எல்லாம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் பெண் குழந்தையைக் கூட, அர்னவ் பார்ப்பதற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அர்னவ் பிக் பாஸ் வீட்டுக்குள் அன்ஷிதாவுடன் ஜோடியாக சென்றுள்ளார். அங்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.