என்னை ரொம்ப காயப்படுத்தி விட்டார் - அன்ஷிதா சொன்ன நபர் இவர் தானா? அர்னவ் சொன்ன பதில்
பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு நன்றி தெரிவித்து சௌந்தர்யா பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். பின் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள்.
பிக் பாஸ் 8:
ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார். இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நேற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
நிகழ்ச்சிக்கு பின் அன்ஷிதா:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அன்ஷிதா, இந்த சீசனுடைய மூன்றாவது வாரத்தில் இருந்து என்னுடைய வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒருவர் ரொம்பவே காயப்படுத்தி இருந்தார். அந்த நபர் இனி என் வாழ்க்கைக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதை நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தான் யோசித்தேன். பின் பிக் பாஸ் முடிந்து வெளியில் வந்ததுமே நேராக அவரை சந்தித்தேன்.
சர்ச்சைக்கு காரணம்:
அவரிடம் நீங்கள் இனி என் வாழ்க்கைக்கு தேவையில்லை என்று தைரியமாக சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இவர் எந்த பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், பலருமே இவர் நடிகர் அர்னவை தான் குறிப்பிட்டு சொல்கிறார் என்று கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக அர்னவ்-அன்ஷிதா இருவருக்கும் நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, கடந்த சில ஆண்டுகளாகவே அர்னவ், திவ்யா, அன்ஷிதா இடையே இருக்கும் பிரச்சனை அனைவரும் அறிந்ததே.
அர்னவ் சொன்னது:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட இவர்கள் இருவரும் ஒன்றாக தான் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கு பிறகுதான் இவர்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அர்னவ் ரெண்டாவது வாரத்திலேயே வந்துவிட்டார். அதற்குப் பின் தான் அன்ஷித தன்னுடைய வாழ்க்கை மாற தொடங்கியதாக சொல்லி இருந்தார். அந்த வீட்டுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள். பின் இது தொடர்பாக அர்னவ், அது அவர்களுடைய பர்சனல். எனக்கு எதுவும் தெரியாது. நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி இருக்கிறார்.