தலைமறைவான நடிகை, தாயார் அளித்த புகார் - நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

By subhashini · 4/8/2025

பிக் பாஸ் நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோஷியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை மீரா மிதுன். இவர் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியிலேயே இவர் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து இருந்தார்.

மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் மீராமிதுன் அவர்கள் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசி இருந்தார்.
இதனால் மீரா மிதுன் மீது பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார்கள். இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீரா மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்து இருந்தது.

மீரா மிதுன் குறித்த தகவல்:

இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார். பின் மீரா மிதுன் சிறையிலிருந்து வெளிவந்து இருந்தார். சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மீரா மிதுன் நிறைய பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர், நான் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து விட்டேன். எல்லோரும் மன்னித்து விடுங்கள் என்றெல்லாம் பேசி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் மீண்டும் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு விட்டு இருக்கிறது.

போலீஸ் வலைவீச்சு:

பின் இந்த வழக்கு தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து மீரா மிதுனை பிடிக்க பிடிவாரண்ட் போடப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் மீரா மிதுன் தற்போது தலைமறைவாகி இருக்கிறார். அவர் டெல்லியில் மறைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து மீரா மிதுனின் தாயார் புகார் அளித்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=-68iwlc--ek

மீரா மிதுன் அம்மா பேட்டி:

அதில் அவர், தன்னுடைய மகளை காணவில்லை என்றும், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும்,
என் மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் மனுவில் கூறி இருக்கிறார். அந்த மனுவின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மீரா மிதுனை ஆகஸ்ட் 11ஆம் தேதியில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full