கொரோனா பாதிப்புடன், கவச உடை அணிந்து வந்து தனது மனைவிக்கு அஞ்சலி செலுத்திய அருண் ராஜா - உருக்கமான வீடியோ.

By Rajkumar · 17/5/2021

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .

https://www.youtube.com/watch?v=J6Ksp776CYA&t=95s

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இப்படி ஒரு நிலையில் இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் காலமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

இதையும் பாருங்க : லாக்டவுனில் திருமணத்தை முடித்த சமையல் மந்திரம் கிரிஜா - இதோ திருமண புகைப்படம்.

தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கன்னக்குழி அழகே என்கிற ஆல்பம் பாடலை எழுதி உள்ளார். அதே போல இவர் கனா படத்தையும் இயக்கி இருந்தார்.இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா மறைந்திருக்கிறார்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அருண்ராஜா தனது மனைவியை பார்ப்பதற்காக கவச உடை அணிந்து வந்து தனது மனைவிக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார். கவச உடையுடன் தனது மனைவிக்கு இறுதி சடங்கை செய்ததை பார்த்து அங்கு இருந்தவர்கள் அனைவரும் கலங்கினர். இந்த வீடியோவை பார்த்த பலரும் யாரும் இப்படி ஒரு கொடுமை வரக்கூடாது என்று வருத்தப்பட்டு வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full