'உடனிரு எப்போதும்' கொரோனாவால் இறந்த தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அருண்ராஜா போட்ட உருக்கமான பதிவு.

By Arun · 16/5/2022

கொரோனாவால் இறந்த தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தாக்கத்தினால் பல லட்சம் உயிர்கள் பலியாகின. பொதுமக்களை போன்று தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் . நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இப்படி ஒரு நிலையில் அருண் ராஜா காமராஜாவின் மனைவியும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் காலமாகி இருந்தார். தமிழ் சினிமா உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கன்னக்குழி அழகே என்கிற ஆல்பம் பாடலை எழுதி உள்ளார்.

கொரோனாவால் இறந்த மனைவி :

அதே போல இவர் கனா படத்தையும் இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா காலமானார். மனைவி இறந்த போதே அருண் ராஜாவிற்கும் கொரோனா தொற்று குணமாகாததால் அவர் பாதுகாப்பு உடை அணிந்து வந்து தன்னுடைய மனைவிக்கு இறுதி சடங்கை செய்து இருந்தது பலரை நிகழ்ச்சிகள் ஆழ்த்தியது.

கவச உடையில் சென்று இறுதி சடங்கு :

கவச உடையுடன் தனது மனைவிக்கு இறுதி சடங்கை செய்ததை பார்த்து அங்கு இருந்தவர்கள் அனைவரும் கலங்கினர். இந்த வீடியோவை பார்த்த பலரும் யாரும் இப்படி ஒரு கொடுமை வரக்கூடாது என்று வருத்தப்பட்டனர். மனைவிக்கு இழப்புக்குப் பிறகு அவ்வப்போது அவர் தன்னுடைய மனைவி பற்றிய பதிவுகளை சமூகாவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் இப்படி ஒரு நிலையில் தன் மனைவியின் முதல் நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் :

அவரது மனைவி இறந்து 1 வருடம் ஆன நிலையில் தனது மனைவியை நினைத்து எமோஷ்னல் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் தன் மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து 'உடனிரு எப்போதும் உடைந்திடா உண்மையாய், உடைத்திடா மென்மையாய் .. ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ நீயே அரணாய் எனை ஆள.. உடனிரு எந்நாளும் பாப்பி' என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். அருண்ராஜாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

அருண்ராஜாவின் நெஞ்சுக்கு நீதி :

தற்போது அருண்ராஜா காமராஜா, உதயநிதி வைத்து நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி இருக்கிறார். பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஆர்ட்டிக்கள்15'. இந்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட மேடையில் பேசும் போது மறைந்த தன் மனைவியை நினைத்து கண்ணீர் வடித்தார் அருண்ராஜா

Tamil Behind Talkies AMP · Quick view
View full