ஆர்னாவிற்கும் ஆதரவாக அருண் வெளியிட்ட வீடியோ - விமர்சிக்கும் நெட்டிசன்கள். வீடியோ இதோ.

By Arun · 15/10/2022

தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். சமீபத்தில் தான் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.அதோடு இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார்.

மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருக்கிறார். இது குறித்து அர்னவ் அவர்கள் பேட்டி அளித்து இருக்கிறார்.அதில் அவர், என்னுடைய மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதே காவல் நிலையத்தில் இருந்து வந்த தகவல் மூலம் தான் எனக்கு தெரியும். திவ்யா சொன்னது முழுக்க முழுக்க பொய்.

https://www.youtube.com/watch?v=CEd_E2wIbjI&t=2398s

அவர் என்னுடைய குழந்தையை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இவளுக்கு பின்னால் நடிகர் ஈஸ்வர் தான் இருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களுக்குள் இருந்த பிரச்சனையை பெருசு படுத்தியது அவன் தான்.எங்களுக்கு நல்லது செய்கிறேன் என்று அவன் எனக்கு பல பிரச்சனைகளை கொடுத்தான். நாங்கள் ஐந்து வருடமாக காதலித்து கொண்டிருந்தோம் அவர் விவாகரத்து ஆனவர் என்பது தெரியும்.

https://www.youtube.com/watch?v=dSgDScsDKPg

ஆனால், திருமணம் செய்யப் போகும் கடைசி நிமிடத்தில் தான் தனக்கு விவாகரத்து ஆனதையே அவர் சொன்னார். இந்த நிலையில் திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது குறித்து அர்னவிற்கு சம்மனும் அனுப்பி இருந்தார்கள். ஆனால், அர்னவ் போலீஸ் இடம் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் ஷூட்டிங் சென்ற அர்னவை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full