தனுஷ் இப்படி எல்லாம் செய்வாருன்னு நான் நினைக்கவே இல்லை - நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 23 ஆண்டுகளுக்கு மேல் அருண் விஜய் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். பின் இவர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.
இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது. அதற்குப் பிறகு இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், ஹீரோவாகவும் மிரட்டி கொண்டு வருகிறார். அந்த வகையில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் சாப்டர் 1. இவர்களுடன் இந்த படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன், பரத் போப்ன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து அருண் விஜய் அவர்கள் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்தார்.
அருண் விஜய் குறித்த தகவல்:
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது அருண் விஜய் அவர்கள் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனால் இந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது.
இட்லி கடை படம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் சார்பாக அளித்த பேட்டியில் நடிகர் அருண் விஜய், மதுரை என்றாலே சாப்பாடு தான். மதுரையில் சூட் செய்த போது தனுஷ் பிரதர் ரோட்டு கடையில் சாப்பிடலாம் என்று சூட் முடித்துவிட்டு சொல்வார். நாங்களும் அங்கு வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிடுவோம். பரோட்டா சால்னா என்று சாப்பிட்டுக்கொண்டே தான் இருந்தோம். அங்கு நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் ஜிம் இல்லை. அதனால் நாங்கள் இங்கிருந்து உபகரணங்கள் எல்லாம் கொண்டு சென்று அங்கு ஒரு பயிற்சியாளரையும் வைத்து ஒர்க்அவுட் செய்தோம்.
https://www.youtube.com/watch?v=pjRFVu6VhnY
அருண் விஜய் பேட்டி:
ஏழு மணிக்கு சூட் தொடங்குவதாக இருந்தால் 4:00 மணிக்கு எழுந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வோம்.
அதற்குப்பின் ஏழு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவோம். இதை தனுஷ் பிரதர் சரியாக கடைபிடித்தார். ஜிம் ஒர்க் அவுட் முடித்துவிட்டு வந்து இயக்கம், நடிப்பு என்று அனைத்து வேலைகளையும் அவர் செய்தார். எனக்கு அதெல்லாம் ரொம்ப சப்ரைஸ் ஆக இருந்தது. அதை பார்க்கும்போது நாம் இன்னும் ஓட வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. அவருடைய அசிஸ்டன்ட் எனக்கு டயட் உணவு செய்து கொடுப்பார். தனுஷ் பிரதர் சைவ உணவுகள் தான் சாப்பிடுவார். எனக்கு மீன், வேக வைத்த நாட்டுக்கோழி என்று செய்து கொடுப்பார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்