முத்தக் காட்சியில் ஹீரோயினின் உதட்டை கடித்த அருண் விஜய்.! வெளியான புகைப்படம்.!

By Rajkumar · 7/2/2019

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். 

அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து. அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வரும் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். 

செக்கச்சிவந்த வானம்' படத்துக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் 'தடம்'. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு ஆகியார் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவர், இந்த படத்தில் லிப் லாப் காட்சியில் நடிக்க சொல்லி இயக்குனர் என்னிடம் கேட்டார். ஆனால், முதலில் நான் மறுத்து விட்டேன். பின்னர் எனது மனைவியிடம் சம்மதம் வாங்கி கொண்டு தான் அந்த காட்சியில் நடித்தேன் என்று கூறினார்.

அருண் விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போதே குறுக்கிட்டு பேசிய இந்த படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, “பிடிக்காமல் நடித்து தான் 13 டேக்குகள் முத்தக்காட்சிக்கு வாங்கினாரா?. அதுமட்டுமல்ல தணிக்கைக்குழுவினர் எங்களிடம் கேட்டது இந்தக் காட்சியில் படத்தின் ஹீரோ நடிகையின் உதட்டைக் கடித்துவிட்டாரா என்று கேள்வி மேல் கேட்டனர். இல்லை என அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது" என்றவுடன் என் மனைவி எல்லாம் இருக்காங்க இத பத்தி இப்போ பேச வேண்டாமே என்று கூறினார் அருண் விஜய்.

behindtalkies AMP · Quick view
View full