தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா – பாலா கூட்டணியில் படம் ஒன்று உருவாகிவந்தது. மேலும், இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யா அவர்கள் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். நந்தா திரைப்படம் சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்து இருந்தது.

Advertisement

வணங்கான் படம் :

20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் சூர்யாவின் 41வது திரைப்படம் ஆகும். மேலும், இந்த படத்திற்காக மதுரையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமில்லாமல் சூர்யாவுடன் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜூ உட்பட பலர் நடித்து வந்தனர்.

சூர்யா விலகல் :

இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் சூர்யா கோபத்துடன் படப்பிடிப்பை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக இயக்குனர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் ‘2DEntertainment ‘ நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம்.

Advertisement

எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்” என்று பதிவிட்டுள்ளார். சூர்யா தற்போது தயாரிப்பில் இருந்தும் விலகி இருப்பதால் வணங்கான் படத்தை யாரை வைத்து தயாரிப்பது என்ற புதிய தலைவலி தற்போது பாலாவிற்கு ஏற்பட்டது. சூர்யா விலகிய நிலையில் இந்த படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிறைவு இருந்தது

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கிய நிலையில் அருண் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது அதில் சூர்யாவின் கெட்டப்பிலேயே இருக்கிறார் அருண் விஜய்.

Advertisement