படு ஒல்லியாக இருந்த அருவி பட நடிகை.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

By Rajkumar · 3/5/2019

கடந்த ஆண்டு புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான அருவி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி பாலன் சிறப்பாக நடித்ததற்காக பல விருதுகளையும் பெற்றார். அருவி படத்தில் சமூக பிரேச்சனைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருந்த அதிதி பாலன்.

மேலும், அந்த படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடிக்க வேண்டும் என்பதால் தனது உடலை 10 கிலோவிற்கு மேல் குறைத்தார். அருவி என்ற அந்த கதாபாத்திரத்தில் மேக் அப் எதுவும் அப்பிக் கொள்ளாமல் சாதாரண தோற்றத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

அந்த படத்திற்கு முன்னாள் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதிதி பாலன். சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் கேள்வி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் முகத்தில் பல கோட்டிங்கில் மேக் அப்பை போட்டு அப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை அதிதி. அதே போல அருவி படத்தில் படு ஒல்லியாக இருந்த அதிதி பாலன் தற்போது கொஞ்சம் உடல் எடை கூடி வயதான பெண் போல தோற்றமளிக்கிறார் அதிதி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full