அருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு.! ஹீரோவாகும் முன்னணி நடிகர்.!

By Rajkumar · 3/6/2019

கடந்த ஆண்டு புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான அருவி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கபட்டது. இந்த நிலையில் தற்போது அருண் பிரபுவின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்தை தொடர்ந்து நடிகர் சிவர்கார்த்திகேயன், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்து புதுமுகத்தினர்களை சினிமாவில் அறிமுகம் செய்து வருகிறார். சிவா நடத்தும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம்  ‘கனா’. சிவாவின் நண்பரும், பிரபல காமெடி நடிகருமான அருண்ராஜா காமாராஜை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார். 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவா தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டாவது படத்தை தயாரிக்க இருப்பதாகவும். பிரபல யூ ட்யூப் சேனல் பிளாக் ஷீப் குழுதான் அந்த படத்தில் பணிபுரிய உள்ளதாகவும், ரியோ ராஜ் ஹீரோ நடிக்கிறார் என்று அறிவிப்பு விட்டிருந்தார். தற்போது அந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. 

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூன்றாவதாக தயாரிக்க இருக்கும் படத்தை பற்றியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அருவி என்ற படத்தை இயக்கிய அருண் இயக்கத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சிவா. 

Tamil Behind Talkies AMP · Quick view
View full