விஜய்யை டான்ஸிங் ரோஸுடன் ஒப்பிட்டு வெளியான வீடியோ - ஆர்யா போட்ட கமன்ட்.

By Rajkumar · 30/7/2021

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

https://twitter.com/Master_Mahiii/status/1420653378795827200

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் டான்சிங் ரோஸாக வரும் ஷபீர், கலக்கலான உடல்மொழியுடன் ரிங்கில் இருக்கும்போது ஆர்யாவையும் பின்னுக்குத் தள்ளி மொத்தமாக ஸ்கோர் செய்கிறார்.இவர் ஒரு நாடக கலைஞர். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர் என்பதால் அது அவரை டேன்ஸிங் ரோஸ் ஆக நடிப்பதற்கு உதவியிருக்கிறது.

இதையும் பாருங்க : குழந்தை இல்லாமல் என்ன மாதிரி கஷ்டப்படுறாங்க, ஆனா நீங்க இப்படி லூசு மாதிரி பண்றீங்க ச்சீ - சமீரா வெளியிட்ட வீடியோவால் கடுப்பான பெண் ரசிகை.

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்காக முறையாக பாக்ஸிங் பயிற்சி எடுத்திருக்கிறார் ஷபீர்.2014ஆம் ஆண்டு லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியிருக்கிறார் ஷபீர்.ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படத்தில் கலெக்டரின் மகனாக நடித்து இருப்பார். அதே போல ரஜினி நடித்த பேட்ட படத்திலும் நடித்து இருந்தார்.

https://twitter.com/Subha16231898/status/1420675024344608770

சார்பட்டா படம் வெளியானதில் இருந்தே சமூக வலைதளத்தில் டான்ஸிங் ரோஸ் வீடியோ வைரலானது. இப்படி ஒரு நிலையில் டான்சிங் ரோஸ் வசனத்துடன் விஜய்யின் டான்ஸ் வீடியோக்களை ஒப்பிட்டு வீடியோ மீம் ஒன்று வைரலானது. இந்த வீடியோவிற்கு ஆர்யா என்ன கமன்ட் செய்துள்ளார் பாருங்க.

Tamil Behind Talkies AMP · Quick view
View full