திருமணத்திற்கு பின் ஆர்யா- சயீஷா நடிக்கும் முதல் படம்.! அதுவும் இவரது இயக்கத்தில்.!

By Rajkumar · 15/3/2019

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது

ஆரம்பத்தில் ஆர்யாவை சயிஷாவிற்கு திருமணம்செய்து வைக்க ஆயிஷாவின் அம்மாவிற்கு விருப்பமில்லை என்ற ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. ஆனால், அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் இவர்கள் திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மேலும் , இவர்களது திருமணம் செய் சாவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்றது.

கடந்த வாரம் (மார்ச் 8) இவர்களின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் இருவீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் ஒருசில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘ஜெயம் ரவி நடித்த மிருதன்', ‘டிக்.டிக்.டிக்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் புதிதாக எடுக்கவிருக்கும் படம் ‘டெடி'. படத்தின் பெயருக்கு ஏற்றது போலவே இந்த படத்தில் கரடியும் நடிக்கிறதாம். இந்த படத்தில் ஆர்யா நடிக்க ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கவிருக்கிறாராம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full