90ஸ் ரசிகர்கள் மறக்க முடியாத அசத்தப்போவது யாரு கோவை குணா திடீர் மரணம். Kpy பிரபலத்தின் உருக்கமான பதிவு.

By Rajkumar · 21/3/2023

விஜய் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோவை குணா காலமாகி இருக்கும் செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி 90ஸ் ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை துவங்கி இருந்தார்கள். கலக்கப்போவது யாரு சீசன் 1 நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் மதுரை முத்து உள்ளிட்டோரம் கலந்து கொண்டார்கள்.

இதில் கவுண்டமணி குரலில் பேசி தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் கோவை குணா. இந்த சீசனில் இறுதி போட்டியில் ரோபோ சங்கர் மதுரை முத்து கோவை குணா ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் கோவை குணா முதல் பரிசை வென்றார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற எண்ணற்ற போட்டியாளர்களுக்கு சினிமாவிடம் வாய்ப்பு கிடைத்தது.

ரோபோ சங்கர் அமுதவாணன், பழனி பட்டாளம், வடிவேல் பாலாஜி என்று பலருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கோவை குணா அவர்களுக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு தூவினார்கள். அப்போதும் கோவை குணாவும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் கடந்த சில ஆண்டுகளாக எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரியாமல் தான் இருந்தது. இதனால் பலரும் இவரைப் பற்றி இவரது தற்போதைய நிலை என்று பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் இவர் இன்று திடீரன்று காலமாகி இருக்கிறார். இவரது இறப்பிற்கு பல்வேரு காமெடி நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் kpy புகழ் பழனி பட்டாளம் 'கலக்கப்போவது யாரு கோவை குணா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். இதைத் தெரிந்து நான் மிகவும் வருந்துகிறேன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதலாவது வெற்றி பெற்றவர், எங்களின் முன்னோடி இவர். எங்கள் கலக்கப்போவது யாரு குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்கிறோம்' என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full