எனக்கு உதவி இயக்குனருக்கு ஆட்கள் தேவை - ட்ராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து போட்ட பதிவு

By subhashini · 8/4/2025

உதவி இயக்குனர்கள் தேவை என்று அஸ்வத் மாரிமுத்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி, வாணி போஜன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து சமீபத்தில் இவர் இயக்கத்தில் ட்ராகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்து இருந்தார்கள்.

ட்ராகன் படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மட்டும் இல்லாமல் எதிர்பார்த்ததை விட இந்த படம் அதிக வசூல் சாதனையும் செய்திருந்தது என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிரதிப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இருவருமே நன்றி தெரிவித்து இருந்தார்கள்.

அஸ்வத் மாரிமுத்து எடுக்கும் படம்:

மேலும், இந்தப் படத்திற்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்துவிற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதை தொடர்ந்து இவர் சிம்புவின் 51 வது படத்தை இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இதை அடுத்து இவர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சில தினங்களுக்கு முன்பு தான் அஸ்வத் மாரிமுத்து, தனக்கு உதவி இயக்குனர்கள் வேண்டும்.

அஸ்வத் மாரிமுத்து போஸ்ட்:

உதவி இயக்குனராக வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்கள் என்னிடம் சேர்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றெல்லாம் போஸ்ட் போட்டு இருந்தார். அதில், தனக்கு விண்ணப்பிப்பவர்கள் எப்படியான தகுதிகள் இருக்க வேண்டும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து பலருமே நகைச்சுவை பாணியிலேயே அவருக்கு பதிலும் அளித்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது தனக்கு வந்திருக்கும் விண்ணப்பங்கள் தொடர்பாக அஸ்வின் மாரிமுத்து பதிவு போட்டு இருக்கிறார். அதில், உதவி இயக்குனர்களே, உங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பதற்கான கடைசி நாள் முடிந்து விட்டது.

View this post on Instagram

A post shared by Ashwath Marimuthu (@ashwath_marimuthu)

உதவி இயக்குனர் விண்ணப்பம்:

15000க்கும் மேற்பட்ட ரிஸியூம்கள் எனக்கு வந்திருக்கிறது. என்னுடைய குழுவினர் உங்கள் ரிஸியூம்களை பார்க்க இருக்கிறார்கள். அதற்கு சில நேரம் எடுக்கும். அதோடு நான் முன்பு பத்து உதவி இயக்குனர்கள் எடுப்பதற்கு தான் திட்டமிட்டேன். ஆனால், இப்போது என்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து மொத்தமாகவே 20 நபர்களை எடுக்க இருக்கிறேன். என்னை டேக் செய்து சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் பதிவிடும் எல்லா நபர்களும் தேர்ந்தெடுக்கும் நடைமுறை. இந்த 15,000 நபர்களுக்கும் ஒன்றுதான் என புரிந்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார் .

Tamil Behind Talkies AMP · Quick view
View full