40படத்தின் கதையை கேட்ட போது இதான் பண்ணேன் - முதல் பட மேடையில் ஓவர் காண்பிடன்ஸ்ஸில் பந்தா காட்டிய அஸ்வின்

By subhashini · 6/12/2021

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அஸ்வின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பின் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் அஸ்வின். அதனை தொடர்ந்து இவர் ஆல்பம் சாங், வெப் சீரிஸ் என்று நடித்து வருகிறார். மேலும், தற்போது அஸ்வின் அவர்கள் 'என்ன சொல்லப்போகிறாய்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=nBcfsm6DMQs

இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. குக் வித் கோமாளி புகழின் காமெடியும், அஸ்வினின் காதல் காட்சிகளும் ட்ரெய்லரில் அட்டகாசமாக வந்திருக்கிறது. அதோடு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அஸ்வின் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என்ன சொல்லப் போகிறாய் படம் உருவான விதம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன். இதுவரை நான் கேட்ட 40 கதைகளில் நான் தூங்கி விட்டேன். ஆனால், நான் தூங்காத ஒரு கதை தான் என்ன சொல்ல போகிறாய். அந்த கதை பிடித்துப்போய் நான் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். மேலும், கதை, தயாரிப்பாளர், மியூசிக் என்று ஏனோ தானோ இல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து இருக்கிறோம். ஏன் என்றால் நான் நிறைய பார்த்துவிட்டேன். ஏதோ படம் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல் எல்லா கோணத்திலும் யோசித்து தான் செய்து இருக்கிறோம். இதில் என்னுடைய உழைப்பு மட்டும் இல்ல எல்லாருடைய உழைப்பும் இருக்கிறது.

எல்லோரும் இந்த படத்திற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள். அடிக்கடி செட்டில் எனக்கும் இயக்குநருக்கும் சண்டை வரும். அப்போது நான் படம் நல்லா இல்லை என்றால் நான் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று சொல்லுவேன். அதற்கு உடனே அவர் ஏன்டா, இப்படி எல்லாம் பண்ற என்று சொல்வார். பின் காட்சிகள் எடுக்கும் போது இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம் என்று எனக்கும் அவருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வரும். அதையெல்லாம் தாண்டி படம் நன்றாக வந்திருக்கிறது. மக்கள் எனக்கு கொடுத்த அன்பை அவர்களுக்கு நான் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதில் நான் கவனமாக இருக்கிறேன் என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் அனைவரும் அஸ்வின் படத்தின் ரிலீசுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full