நான் சினிமா விட்டு ஓடிட்டேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் அஸ்வின் குமார்
சினிமாவை விட்டு விலகுவதாக பரவிய வதந்திகளுக்கு பதிலீடு கொடுக்கும் வகையில் அஸ்வின் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார்.
அதே போல இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களிலும் இவர் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். இப்படி 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்தவர் அஸ்வின். இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசன் மூலம் இவர் பலரது மனதையும் கவர்ந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார்.
அஸ்வின் குறித்த தகவல்:
இதனை தொடர்ந்து இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இயக்குனர் ஹரிஹரன் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த செம்மி படம் ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் நொடிக்கு நொடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அஸ்வின் பேட்டி:
இதற்கிடையில் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரபலம் ப்ரகதியுடன் சேர்ந்து அடடா என்ற பாடலில் நடித்திருக்கிறார். இந்த பாடலை பிரகதியே பாடி இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை ஹரிகரன் எழுதியிருக்கிறார். இந்நிலையில் தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஸ்வின், நான் எந்த ஒரு சினிமா பின்னணியை சேர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவன் கிடையாது. எனக்கு வரக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் கடவுள் கொடுத்தது தான். அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே நோக்கம். அதை நான் வீணாக்க கூடாது என்று நினைக்கிறேன். நமக்கு வருவது எப்போதுமே நமக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும்.
வாய்ப்புகள் பற்றி சொன்னது:
நான் ரியாலிட்டி ஷோவில் இருந்த போது என்னை சுற்றி இருந்தவர்கள், அவர் இத்தனை படங்கள் செய்கிறார். இவர் இத்தனை படங்கள் செய்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், எனக்கு அப்போது எதுவுமே அமையவில்லை. எனக்கு அந்த நேரம் அமையவில்லை என்றேன். திடீரென்று குட்டி பட்டாசு பாடல் எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியாது. அதனை செய்தேன். அந்த பாடலுக்கு பிறகு தான் எனக்கு பட வாய்ப்புகள் வந்தது. செம்மி படத்தில் நடிக்க பிரபு சாலமன் சார் தான் கூப்பிட்டார். அதுவும் கடவுள் கொடுத்தது தான். அதேபோல் தற்போது சில வாய்ப்புகள் அமைந்திருக்கிறது. நான் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறேன். சிலவை படம் ரிலீஸ் ஆகவில்லை.
https://www.youtube.com/watch?v=6jVN1hLeF3c
விமர்சனங்களுக்கு கொடுத்த விளக்கம்:
சிலுவை இன்னும் படப்பிடிப்பில் தான் இருக்கிறது. ஆனால், அது எப்போது வெளிவரும் என்று நான் சொல்ல முடியாது. காரணம், அது அனைத்துமே தயாரிப்பாளர் கைகளில் இருக்கிறது. நான் இங்கு தான் இருக்கிறேன் என்று யாரிடம் நிரூபிக்க சொல்கிறீர்கள்? நான் எங்கிருந்து வந்தவன், எதுவரை வந்திருக்கிறேன், எல்லா விஷயங்களும் தெரியும். ஆனால், வெளியே இருந்து பார்க்கும் பொழுது நான் சினிமாவை விட்டு சென்று விட்டேனோ? வாய்ப்புகள் கிடைக்கவில்லையா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், அவரவர் வாழ்க்கைக்குள் சென்று பார்த்தால் தான் அவர் என்ன மாதிரியான கஷ்டங்களை எல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியும். நான் இங்கேதான் இருக்கப் போகிறேன். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.