'உங்களுக்கு வெக்கமா இல்ல' - அனுபவம் வாய்ந்த இயக்குனரை திட்டி தீர்த்த அஸ்வின். காரணம் அவர் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சிகள் தான்.

By Siva · 7/9/2022

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார். அதே போல இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களிலும் இவர் சிறு ரோலில் நடித்து இருக்கிறார்.

இப்படி 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்தவர் அஸ்வின். இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசன் மூலம் இவர் பலரது மனதையும் கவர்ந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக அஸ்வின் நடித்து இருந்தார்.

சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் :

பின் இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இயக்குனர் ஹரிஹரன் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார். பின் பல சர்ச்சைகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகி இருந்தது.ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து இருந்தது. இவருடைய பேச்சை கேட்டு பலரும் கோபமடைந்து இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறி இருந்தார்கள்.

தமிழ் ராக்கர்ஸ் பட காட்சிகள் :

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அறிவழகன் இயக்கிய ஈரம், குற்றம் 23 போன்ற படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் அஸ்வினை மறைமுகமாக கேடு செய்து இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாக பரவியது அதிலும் ஒரு காட்சியில் என் பையனுக்கு நடிக்க வாய்ப்பு கேட்டு இருந்தேன் இல்லையா அஸ்வின் குமார் அவனே ஏகினு சொல்லிப்பான்.

https://twitter.com/itz__Beast/status/1561278153057714177

அஸ்வினை கலாய்த்து வசனம் :

போட்டோவில் பார்ப்பதற்கு தான் தூங்குற மாதிரி இருப்பான் ஆனால் நேரில் நல்லா துரு துருனு இருப்பான் என்று வசனம் இடம் பெற்று இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு அஸ்வின் சரமாரியாக தாக்கப்பட்டார் என்று கேலி செய்து இருந்தார்கள். அது மட்டும் அல்லாது 40 கதையை கேட்டவன், ஸ்லீப்பிங் ஸ்டார் என்று அஸ்வினை பல இடங்களில் இந்த படத்தில் மறைமுகமாக கேலி செய்திருந்தார் இயக்குனர்.

பதிலடி கொடுத்த அஸ்வின் :

இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வேகமாக அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டு இருக்கிறார் அதில் ''தாங்கள் (Brainbeauty) அறிவு அழகு கிடையாது, (Brainless Beauty) அறிவு இல்லாத அழகு என்று மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். சார்..ரிவ்யூ பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். உங்களுக்கு வெட்கமாக இல்லையா உங்களின் சொந்த திறமையை நம்புங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full