வாய்ப்பு தருவதாக சொல்லி அத்துமீறி நடந்தார்கள் - வேதனையில் கிழக்கு சீமையிலே நடிகை அஸ்வினி பகிர்ந்த விஷயம்
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவம் குறித்து நடிகை அஸ்வினி விக்னேஷ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் இடம்பெற்ற 'மாமனே உன்ன காணாம மத்தியில் சோறும் தின்னாம' என்ற பாடல் 90 காலகட்டம் தொடங்கி 2கே வரை ரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அஸ்வினி விக்னேஷ். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். அதற்குப்பின் இவர் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவிலிருந்து விலகி விட்டார். தற்போது இவர் நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் வெளியான சுழல் 2 என்ற வெப் தொடரின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அஸ்வினி விக்னேஷ் குறித்த தகவல்:
இந்த தொடரில் அஸ்வினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து அஸ்வினி விக்னேஷ் கூறியது, என்னிடம் தவறாக நடந்து கொண்ட நபரின் அலுவலகம் கீழே தான் இருந்தது. ஒரு நாள் எனக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.
அஸ்வினி விக்னேஷ் பேட்டி:
அப்போது என்னுடைய அம்மாவுக்கு பயங்கரமான காய்ச்சல். எப்போதும் அவர் என்னுடன் தான் வருவார். ஆனால் அன்று என் அம்மா என்னுடன் வர முடியவில்லை. இருந்தாலுமே, அங்கு இருந்த பெண் ஒப்பனை கலைஞர் ஒருவர் என்னுடன் வந்தார். ஆனால், அங்கு இயக்குனர் வரவே இல்லை. அதற்குப்பின் அங்கு வந்த நபர், மேலே செல் என்று சொன்னார். அந்த வயதில் எனக்கு பெரிதாக அந்த அளவிற்கு புரிதலும் இல்லை. அங்கு தனியாக போகலாமா? என்று கூட எனக்கு தோன்றவில்லை. பின் என்னுடன் வந்த பெண்ணிடம், அக்கா நீங்களும் என்னுடன் வருவீர்களா? என்று கேட்டேன். ஆனால், அவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
https://www.youtube.com/watch?v=opmZTQQSeRQ
மோசமான சம்பவம்:
இந்த நிலையில் நான் மட்டும் தான் மேலே போனேன். அங்கு சென்று பார்த்தல் யாருமே இல்லை. சில ரூம்கள் மட்டும்தான் இருந்தது. உள்ளே இருந்த நபர் என் பெயரை சொல்லி அழைத்தார். அப்போது கூட எனக்கு இங்க தவறாக ஏதாவது நடக்குமா? என்று எண்ணம் வரவே இல்லை. நான் ரூமில் சென்றவுடன் அவரை என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அது என் வாழ்க்கையில் மோசமான சம்பவம். பின் வீட்டிற்கு வந்த நான் என் அம்மாவிடம் நடந்ததை சொன்னேன். அம்மா ரொம்பவே அதிர்ச்சி அடைந்தார். அந்த சம்பவம் நடந்தது என்னால் தான், அந்த சூழ்நிலைக்கு நான் தான் தள்ளி விட்டேன் என்று நினைத்தேன்.
வாழ்க்கை பாடம்:
குற்ற உணர்ச்சியில் நான் சில மாத்திரைதையும் எடுத்துக் கொண்டேன். அதனால் என்னுடைய உடல்நிலை ரொம்பவே பாதித்தது. பின் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அதற்கு பின் என்னுடைய அம்மா, இது உன்னுடைய தவறு கிடையாது. தயவுசெய்து உன்னை நீயே காயப்படுத்தி கொள்ளாதே என்று அறிவுரை சொன்னார். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் ரொம்பவே தைரியசாலியாக மாறினேன். அன்றிலிருந்து நான் படப்பிடிப்பு, துறை சார்ந்த வேறு எதற்கு சென்றாலுமே அதற்கான வேலையை மட்டும் தான் பார்ப்பேன். வேறு எந்த விஷயத்திலும் ஈடுபட மாட்டேன். அது என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாடம் என்று கூறியிருக்கிறார்.