நயன்தாராவிற்கு முன் பில்லா படத்தில் கமிட் ஆகி இருக்கும் அசின் - படத்திற்காக அவர் நடத்திய டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் இதோ.

By subhashini · 10/3/2023

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தத்துடன் ஜலித்து வருபவர் நடிகர் ரஜினி இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. இதனாலையே இவர் நடித்த படங்களில் தலைப்பை தற்போது இருக்கும் பல நடிகர்கள் பயன்படுத்தி நடித்திருக்கிறார்கள். மாப்பிள்ளை, போக்கிரி ராஜா, பொல்லாதவன், ராஜாதி ராஜா, பாயும் புலி, தர்மதுரை, நான் சிகப்பு மனிதன், படிக்காதவன் என்று ரஜினி நடித்த படங்களில் சூப்பர் ஹிட் டைட்டில் கலை பயன்படுத்தி பல்வேறு ஹீரோக்களின் படங்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியாகிய மாபெரும் ஏற்றடித்த பில்லா படத்தில் டைட்டிலை மட்டும் அல்லாது அந்த படத்தின் கதையிலேயே நடித்தவர் நடிகர் அஜித்குமார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான விழா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் அஜித், நயன்தாரா, நமீதா பிரபு, ரஹ்மான் என்று பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பில்லா 2 படத்திலும் நடித்திருந்தார் அஜித். ஆனால், பில்லா 1 அளவிற்கு அந்த படம் மாபெரும் வெற்றி அடையவில்லை. இந்த படத்தில் அஜித்துக்கு நிகராக நயன்தாராவிற்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் குவிந்தது. குறிப்பாக இந்த படத்தில் ஆக்சன் மற்றும் கிளாமர் காட்சிகளில் சரிக்கு சமமாக நடித்து அசைத்து இருப்பார் நயன்தாரா. அதிலும் குறிப்பாக ஏஞ்சலனா ஜொலி ஸ்டைலை காப்பி அடித்து இந்த படத்தில் நடித்திருப்பார் நயன்தாரா.

இந்த படத்தில் நயன்தாராவின் ஸ்டண்ட் காட்சிகளை விட இவரது தாராளமான கவர்ச்சி தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நயன்தாரா முதன்முறையாக பிக்னி காட்சியில் நடித்திருந்தார். சொல்லப்போனால் இந்த படத்திற்கு பின்னரே நயன்தாராவிற்கு லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. அனால், இந்த ரோலுக்கு முதலில் கமிட் செய்யப்பட்டது அசின் தான்.

இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூக்கள் கூட அசின் கலந்து கொண்டார். ஆனால் ஒரு சில காரணத்தால் இவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். ஒருவேளை இந்த படத்தில் பிகினி காட்சிகள் இடம் பெற்றதால் அசின் விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது பின்னர் நயன்தாராவை இ படத்தை பார்த்துவிட்டு என்ற விஷ்ணுவர்தன் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிக்கும் முன்னர் நயன்தாராவிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக பெயர் ஒன்றும் இல்லை வல்லவன் படத்தை தவிர நயன்தாரா பெரிய ஹிட் அமையவில்லை இந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் உடல் எடையை குறைத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்தில் இன்ட்ரோ சாங் ஒன்றில் ஆடியிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full