கணவரை விவாகரத்து செய்யப்போகிறாரா அசின் ? - அவரது லேட்டஸ்ட் செயலால் கிளம்பிய சர்ச்சை. அவரே கொடுத்த விளக்கம்.

By Rajkumar · 28/6/2023

அசினின் இந்த செயலால் தான் அசின் கணவரை பிரியப் போகிறார் என்ற சர்ச்சை கிளம்பி இருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் அசின். தமிழ் சினிமாவில் பல்வேறு மலையாள நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவியின் நடிப்பில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் அசின். ஆனால், அதற்கு முன்னதாகவே ஆர்யா மற்றும் ஷாம் நடிப்பில் வெளியானா 'உள்ளம் கேட்குமே' என்ற படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தார் அசின்.

அதன் பின்னர் நடிகை அசின், விஜய், அஜித், விக்ரம், கமல் என்று பல்வேறு முன்னனி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார். தொடர்ந்து தமிழில் பிஸியாக நடித்து வந்த அசின் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறையவே கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும், நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தன் குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார் அசின்.

திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பின் குழந்தையும பிறந்தது. அசினின் கணவரான ராகுல் ஷர்மா நடத்தி வந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீப காலமாக சாறுக்களை சந்தித்து வந்தது. இதனால் அசினின் கணவர் ராகுல், ரிவோல்ட் எலக்ட்ரிக் என்ற பெயரில் பேட்டரி பைக் விற்பனையில் இறங்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது. நடிகை அசின் சினிமாவில் விளங்கியதில் இருந்து அவரது குடும்பத்தை தான் அதிகம் கவனித்து வருகிறார். மேலும், மற்ற நடிகைகள் போல அசின் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கிடையாது.

இதுவரை 100க்கும் குறைவான பதிவுகளை மட்டுமே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதேபோல கடந்த நான்கு ஆண்டுகளில் தன்னுடைய மகளின் பிறந்த நாளுக்கு மட்டுமே பதிவுகளை பதிவிட்டு வந்தார்.அசின். இப்படி ஒரு நிலையில் நடிகை அசின் தன் கணவருடன் இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார் இதனால் அசின் தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற வதந்தி சமூக வலைதளத்தில் நேரானது

அசின் சமூக வலைதளங்களில் ராகுலுடன் இருக்கும் புகைப்படம் இது ஒன்று மட்டுமே. இவர்களின் திருமணத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரும் கலந்து கொண்டார். அவரின் இறப்பின் போது அசின் பதிவிட்ட இரங்கல் பதிவு தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அசின் ஏன் இவ்வாறு கணவரின் புகைப்படங்களை நீக்கினார் என்பது இன்னும் ஊர்ஜிதமாக தெரிவியவில்லை.

இப்படி ஒரு நிலையில் விவாகரத்து வதந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசின் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் 'கோடை விடுமுறைக்கு நடுவே சந்தோஷமாக காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நம்பவே முடியாத ஆதாரமற்ற சில செய்திகளை பார்க்க நேர்ந்தது. இதை பார்க்கும் போது எங்கள் குடும்பத்தினர் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நாங்கள் பிரிந்துவிட்டோம் என்ற செய்தி வந்தது போல இருக்கிறது. இதைவிட வேறு ஏதாவது செய்யுங்கள். விடுமுறையில் ஐந்து நிமிடத்தை வீணடித்து விட்டோம் என்ற கவலை. இருந்தாலும் விடுமுறை நன்றாகவே இருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full