ஒருவரின் தேவைகளை வைத்து அவரை தண்டிக்க முடியாது அல்லவா? - கில்லி பட நடிகரின் இரண்டாம் திருமணம், பெருந்தன்மை காட்டிய முதல் மனைவி

By subhashini · 28/5/2023

ஆஷிஷ் வித்யார்த்தின் இரண்டாவது திருமணம் குறித்து அவருடைய முதல் மனைவி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் பெரும்பாலும் படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் தான் நடித்து இருக்கிறார். தமிழில் தில், கில்லி, குருவி, ஏழுமலை, உத்தம புத்திரன், அனேகன் போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 11 மொழி படங்களில் நடித்து இருக்கிறார். சமீபகாலமாக இவர் தமிழ் மொழி படங்களில் நடிக்கவில்லை. இவர் தற்போது பெங்காலி, மராத்தி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஆஷிஷ் வித்யார்த்தி திருமணம்:

இதனிடையே இவர் நடிகை, பாடகர் மற்றும் நாடக கலைஞர் பில்லு பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் பழைய நடிகை சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு 60 வயதாகிறது. இந்த நிலையில் இவர் கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

ஆஷிஷ் வித்யார்த்தி முதல் மனைவி அளித்த பேட்டி:

பின் இவர்கள் தங்களின் திருமணத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது இவர்களின் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி முன்னாள் மனைவி பில்லு அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், 2021 ஆம் ஆண்டு ஆண்டே நானும் ஆஷிஷும் விவாகரத்து செய்து கொண்டோம். அதை நாங்கள் வெளிப்படையாக கூறவில்லை. இருந்தாலும், நாங்கள் இருவரும் தற்போது வரை நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம். நான் ஆஷிஷுடன் 22 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.

ஆஷிஷ் வித்யார்த்தி குறித்து சொன்னது:

அது என்னுடைய வாழ்வின் மிக சிறந்த காலம். அவரிடம் கேட்டாலும் நிச்சயம் இதைத்தான் சொல்லுவார். எங்களுக்குள் நிறைய ஒற்றுமை வேற்றுமை எல்லாம் இருக்கிறது. இன்னும் நாங்கள் நண்பர்களே இருக்கிறோம். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் இப்போது வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரை வளர்த்ததில் ஆஷிசுக்கு தான் அதிக பங்கு இருக்கிறது. பொதுவாகவே ஒரு குழந்தை வளர்ப்பில் அம்மாவிற்கு தான் பொறுப்பு அதிகம் என்று சொல்வார்கள். ஆனால், எங்களுடைய வாழ்க்கையில் ஆஷிசுக்கு தான் பெரிய பங்கு இருக்கிறது.

பிரிவு குறித்து சொன்னது:

அவர் தன்னுடைய மகனுடன் நண்பராக மட்டுமில்லாமல் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். நாங்கள் எங்களுடைய பிள்ளையை வளர்ப்பதிலேயே அதிக காலத்தை செலவழித்தோம். அதற்கு பின்பு எங்களுக்கான பாதையை தேடிக்கொண்டோம். அதற்கு எதுவும் தடையாக இருக்க வேண்டாம் என்று தான் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அவருடைய கனவு வேறு, என்னுடைய கனவு வேறு. அவரவர்கள் தங்களுடைய எதிர்கால விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள உரிமை உண்டு. இதற்கு பிரிவு தேவைப்பட்டது என்பதால் நாங்கள் பிரிந்து விட்டோம்.

இரண்டாம் திருமணம் குறித்து சொன்னது:

எங்களுடைய பிரிவுக்குப் பின்னர் நிறைய பிரச்சனை கஷ்டம் இருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வந்தது. ஆனால், அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக நாங்கள் எங்களுடைய பாதைகளை தேர்ந்தெடுத்து சென்று கொண்டிருக்கிறோம். இப்போது அவர் திருமணம் செய்திருக்கிறார். அதற்காகத்தான் அவர் என்னை விவாகரத்து செய்தார் என்ற பேச்சுகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இது முட்டாள்தனமானவை. ஒருபோதும் அவர் என்னை ஏமாற்றியதில்லை. நானும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இப்போது என்னுடைய வழியில் நான் செல்கிறேன். நான் இப்போது என்னுடைய அடையாளத்தை தேடி சென்று கொண்டிருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full