4 வருசமா சம்பளம் கொடுக்காம அடியாட்கள வச்சு மிரட்டுறாங்க - அறம் இயக்குநர் மீது உதவி இயக்குநர் கொடுத்த புகார்

By subhashini · 21/7/2025

நயன்தாரா படத்தின் இயக்குனர் மீது உதவி இயக்குனர் ஒருவர் புகார் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் நயன் நடித்த பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்று அறம்.

கடந்த 2017 படங்களில் ஆண்டு இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் அறம் படம் வெளியாகி இருந்தது. இது தான் கோபி நயினாரின் முதல் படம். இந்த படத்தில் விக்னேஷ், ராமச்சந்திரன், ரமேஷ், வேலராமமூர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வசூல் பெற்று இருந்தது.

கோபி நயினார் குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்திருந்தார். அதன்பின் கருப்பர் நகரம் படங்களை இயக்குவதற்கான வேலைகளை கோபி நயினார் மேற்கொண்டு இருந்தார். ஆனால், அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதற்கு பின் மனுஷி என்ற படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கினார். இந்த படம் ரிலீசுக்கும் தயாராக இருந்தது. இப்படி பல போராட்டங்களைக் கடந்து இவருடைய படைப்புகளை கொடுத்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=qMeY_wShuNI

உதவி இயக்குனர் புகார்:

இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீது உதவி இயக்குனர் ராஜ்கமல் புகார் அளித்து பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. போலீசில் இயங்குனர் கோபி நயினார் மீது புகார் கொடுத்த உதவி இயக்குனர் ராஜ்கமல் பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர், நான் நான்கு வருடமாக கோபி நயினாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.

https://www.youtube.com/watch?v=2GJ0SIQGoLU

இயக்குனர் மீது வைத்த குற்றச்சாட்டு:

இருந்தாலும் அவர் எனக்கு சம்பளம் எதுவுமே கொடுக்கவில்லை. எனக்கு திருமணம் நடந்தபோது கூட சம்பளமே கொடுக்கவில்லை. இதைப் பற்றி பலருமே அவரிடம் கேள்வி கேட்டார்கள். இதனால் அவர், உன்னால் தான் எனக்கு கெட்ட பெயர் என்று கண்டிக்க ஆரம்பித்தார். எங்களை பற்றி தவறாக பேசி ஊரிலிருந்து விலகி இருக்கும் நிலையும் ஏற்பட்டது. பின் இயக்குனர் கோபி அடியாட்களை வைத்து என்னை மிரட்டி வந்தார்.

கோபி நயினார் பேட்டி:

என்னை மட்டும் இல்லாமல் பல உதவி இயக்குனர்களையும் மிரட்டி இருக்கிறார். இப்போது நான் கோபி நயினார் மீது புகார் கொடுத்திருக்கிறேன். என்னையும் என்னுடைய குடும்பத்தையும் அவர் தொடர்ந்து மிரட்டி கொண்டு வருகிறார் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து கோபி நயனார் அளித்த பேட்டியில், எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் என்னிடம் உதவி இயக்குனராக வேலை செய்திருக்காரா என்பதே இல்லை. என் மீது பொய்யான தகவல்களை கூறி அவதூறு பரப்புகிறார். என் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நானும் ராஜ்கமல் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full