கொரோனா பிரச்சனையால் கடுமையாக கடைபிடிக்கப் பட்டு வந்த ஊரடங்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. கொரோனா பிரச்சினை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மது கடைகள் கூட மூடப்பட்டு இருந்தது. தற்போது மதுபானக்கடைகள், மதுபான சொகுசு விடுதிகள் போன்றவைகள் ஒருசில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் குடி கும்மாளங்களுக்கு பெயர்போன சென்னை ஈசிஆர் – ஓஎம்ஆர் பகுதிகளில் ரிசார்ட் மற்றும் சொகுசு மதுபான விடுதிகள் திறக்கப்பட்டு இருப்பதால் அந்த பகுதிகளில் குடித்துவிட்டு கொண்டாடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இப்படி ஒரு நிலையில் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் மது குடித்துவிட்டு ரகளை செய்வது, வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்வது என்று பல புகார்கள் அதிகரித்து வருவதாக வந்த தகவலின் பேரில் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 5ஆம் தேதி ) ஈசிஆர் பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குடித்துவிட்டு மது ஓட்டியதாக ஒரு காரை மடக்கிய போது அதில் இருந்த ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர்.

Advertisement

அப்போது குடி போதையில் இருந்த அந்த இளம்பெண் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், வாடா போடா என்று போலீசாரை அவதூறாக பேசியதோடு தான் மீடியாவை சேர்ந்தவர் என்றும் கூறிய அவர் போக்குவரத்து காவல் ஆய்வாளரை தாக்கவும் முயன்றார். இந்த காட்சிகள் அனைத்தும் போக்குவரத்து போலீசார் தங்களது உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மற்றும் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளம்பெணின் பெயர் காமினி என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், காமினி திரைப்படத் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காமினி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் காமினியிடம் விசாரணை நடத்தினர்.

Advertisement

Advertisement
Advertisement