நாக சைதன்யா-சோபிதா திருமணம் பற்றி சொன்ன சர்ச்சை கருத்து- ஜோதிடர் எடுத்த அதிரடி முடிவு

By subhashini · 15/11/2024

நாக சைதன்யா – சோபிதா துலிபாலா ஜோடி பற்றி ஜோதிடர் போட்ட வீடியோ குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் தீயாய் பரவுகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஜோஷ்’ திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். பின் கௌதம் இயக்கத்தில் இவர் நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிவு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

இந்த படத்தின் மூலம் தான் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின், இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்கள். அதோட இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின் இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரமும் தெரியவில்லை. இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது.

நாக சைதன்யா- சோபித்த துலிபாலா காதல்:

அதற்கு ஏற்றார் போல், சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனால் நடிகை சமந்தாவிற்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு இருந்தார்கள். வைரத்தை தொலைத்து, தங்கத்தை தேடுகிறார் என நாக சைதன்யாவுக்கு எதிராகவும் ரசிகர்கள் பதிவிட்டு இருந்தார்கள். இதை அடுத்து ஆந்திராவில் ஃபேமஸாக இருக்கும் ஜோதிடர் வேணு சுவாமி, நாக சைதன்யா – சோபிதா திருமண வாழ்க்கை குறித்து பேசி இருந்த வீடியோ தான் சோசியல் குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோதிடர் வீடியோ:

அதில் ஜோதிடர் வேனு சுவாமி, சமந்தா மற்றும் சோபிதாவின் ஜாதகத்தை அலசினால் , இரண்டு ஜாதகத்திலுமே சனியின் கவனம் செவ்வாய் மீதுதான் இருக்கிறது. அதுவும் சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாயின் கவனம் சுக்கிரன் மற்றும் வியாழன் மீது இருக்கிறது. அதனால் வரும் 2027 ஆம் ஆண்டு சோபிதாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் பிரிவு ஏற்படும். அதுவரை நன்றாக தான் இருப்பார்கள். ஆனால், அதற்குப் பிறகு அவர்களது திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா? என்று சந்தேகம் தான். அவர்களின் பிரிவுக்கு காரணமாக பெண் தான் இருப்பார் என்று கூறி இருந்தார்.

ஜோதிடர் குறித்த செய்தி:

இப்படி இவர் சொன்னது தான் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தெலுங்கு சினிமா பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இது தொடர்பாக ஜோதிடர் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரபலங்கள் பலருமே, தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையை குறித்து பேச கூடாது என்றெல்லாம் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஜோதிடர் வேணுசுவாமி, நாக சைதன்யா-சோபிதா குறித்து போட்ட வீடியோவை நீக்கி இருக்கிறார். இருந்தாலுமே தெலுங்கு சினிமாவில் இவருடைய கருத்து தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full