லதா ரஜினிகாந்தை விளாசிய நெட்டிசன், பதிலடி கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை
நெட்டிசன்களுக்கு அஸ்வத்- கண்மணி கொடுத்த பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த தொடர்களில் ஒன்றாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் திகழ்ந்தது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றது.
மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். அதேபோல் இந்த சீரியலில் நடித்த சில நடிகர்கள் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லியாகவும், தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ‘கண்மணி மனோகரன்’. இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து பின் பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் மாறி இருந்தது.
கண்மணி நடித்த சீரியல்கள்:
மேலும், இந்த சீரியலின் மூலம் தான் கண்மணி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இருந்தும் இந்த சீரியலில் இருந்து இவர் பாதியிலேயே விலகிவிட்டார். அதற்குப் பிறகு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ‘அமுதாவும் அன்னலட்சுமி’ என்ற தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த சீரியலும் கடந்த ஆண்டு முடிந்தது. அதற்கு பின் இவர் பெரிதாக எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. அதோடு இவர் சினிமாவில் முயற்சித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் மகாநதி சீரியலில் நடித்து வருகிறார்.
கண்மணி-அஸ்வத் நிச்சயதார்த்தம்:
இதனிடையே நடிகை கண்மணி அவர்கள் சன் டிவி தொகுப்பாளர் ‘அஸ்வத்’ என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். பின் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். சமீபத்தில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.
கண்மணி-அஸ்வத் திருமணம்:
கூடிய விரைவில் இவர்களுடைய திருமண தேதி குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தற்போது அவர்களுடைய திருமணத்திற்கான வேலைகள்தான் நடைபெற்று வருகிறது. இவர்களின் திருமணத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அஸ்வத்- கண்மணி இருவருமே தங்களுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து லதா ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=pOSR-foF5Z0
கண்மணி-அஸ்வத் பதில்:
இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் கண்மணி பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்து நெட்டிசன், ஒரு சினிமா நடிகருக்கு அதுவும், நம்ம ஊரு இல்லாத சினிமா நடிகருக்கு நீங்கள் தரும் மரியாதையை உங்களுக்காக களத்தில் போராடும் போராளிகளுக்கு தருவது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று கமெண்ட் போட்டு இருந்தார். இதற்கு அஸ்வித், என் வாழ்க்கை என் கையில் என்று பதிலளித்திருந்தார். உடனே கண்மணி, நீங்கள் சொல்வதை நீங்கள் முதலில் பின்பற்றுங்கள் என்று கூறியிருந்தார்.