தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனராகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கிய சசி குமார் சமீப காலமாக இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

இப்படி ஒரு நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் அயோத்தி படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் யஸ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ராணி, புகழ், போஸ் வெங்கட், பாண்டி ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த மார்ச் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருந்தது.

Advertisement

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிஇருந்தனர். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ரவிந்திரன் ஆகியோருக்கு நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசளித்து இருந்தார். இறுதியாக சசி குமார் நடித்த எம்ஜிஆர் மகன், ராஜவம்சம்நான் மிருகமாய் மாற, காரி போன்ற படங்கள் எல்லாம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் ஒரு வெற்றிப்படத்திற்காக சசி குமார் காத்துக்கொண்டு இருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் அயோத்தி திரைப்படத்தின் மூலம் நடிகர் சசிகுமாருக்கு ஒரு ஹிட் கிடைத்து இருக்கிறது. இந்த படத்தில் 50 வது நாள் கொண்டாட்ட விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஸ்வினி கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய போது அயோத்தி படத்தின் கதையை தான் கேட்டதாகவும் அந்த படத்தில் நடித்த ஆசைப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் குறித்து இந்த படம் பேசி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

Advertisement

செம்பி படம் சென்று கொண்டிருக்கும் போது தான் ரவி சார் ( அயோத்தி பட தயாரிப்பாளர் ) இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு சார் இதுவும் நான் பண்ணட்டுமா என்று கேட்டேன். அப்போது அவர் என்னிடம் ‘சசி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடன் எனக்கு ஒரு பாண்டு இருக்கிறது. அவர் எனக்கு நீண்ட வருடங்களாக பழக்கம் நீ அவன் சந்திக்க வேண்டும் என்றும் ரவி சார் தான் சசிகுமார் சார் பற்றி அதிகம் சொல்லுவார் சசிகுமார்.

இந்த கதையை கேட்டுவிட்டு சசி சார் பண்ண போகிறார் என்று கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் இந்த கதைக்கு மிகவும் தகுதியான ஆள் சசி சார் என்று நான் இப்போதும் எப்போதும் சொல்லுவேன். அவரிடம் பழகி பார்க்கும் போது தான் அவர் என்ன மாதிரியான மனுஷன் என்று தெரியும். அதேபோல ரவிசரும் வளர்ந்து வரும் இயக்குனர்கள் அனைவரையும் வரவேற்பார். அதுபோலத்தான் அயோத்தி படத்தையும் அவர் மிகவும் நம்பினார் ‘ என்று கூறி உள்ளார்.

Advertisement