நல்ல Review பண்ண எவ்ளோ காஸ் வாங்குற, கமன்ட் செய்த அஸ்வின் ரசிகர். பிரசாந்த்தின் செம பதிலடி.

By Ajju · 15/1/2022

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.

https://www.youtube.com/watch?v=DOmvt-uO5_o&feature=emb_title

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் நடித்த அஸ்வின், கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான 'ஓ மனப்பெண்ணே' படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக்குவித் கோமாளி புகழ் என்று பலர் நடித்துள்ளனர்.

பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் :

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியாகி இருந்தது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பின் பல சர்ச்சைகளுக்கு பின் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், அஸ்வினின் ஆர்வக்கோளாறு பேச்சால் படத்தை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்காது என்று படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டார்கள்.

https://twitter.com/SiddhuG_/status/1481975903857307650

படு மோசமான விமர்சனங்கள் :

இருப்பினும் கொரோனா பிரச்சனை காரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் தைரியமாக இந்த படத்தை பொங்கல் ரிலீஸாக வெளியிட்டு இருக்கின்றனர். இந்த படம் தமிழ் சினிமாவிற்கு புதிதான கதை ஒன்றும் இல்லை வழக்கமாக அரைக்கப்பட்ட பழைய கதை தான். முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி படு மொக்கை. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சுதப்பி வைத்து இருக்கிறார் இயக்குனர். அஸ்வினின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இல்லை.

கழுவி ஊற்றிய பிரசாந்த் :

அதிலும் குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் நடிக்க மிகவும் கஷ்டப்படுகிறார். குக்குவித் கோமாளியில் ஒர்க்கவுட்டான அஸ்வின் - புகழின் மாமா மச்சான் காம்போ படத்தில் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. இந்த படத்தை பலரும் கழுவி ஊற்றி வரும் நிலையில் பிரபல விமர்சகரான பிரசாந்த் இந்த படத்தை கழுவி ஊற்றி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் அஸ்வினின் ரசிகர் ஒருவர் உங்களுக்கு என்ன பணம் கொடுக்கலையா ?

https://twitter.com/itisprashanth/status/1481982931392696321

அஸ்வின் ரசிகருக்கு பிரசாந்த் பதிலடி :

படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுக்க நீங்க எவ்ளோ காஸ் வாங்குறீங்க சொல்லுங்க நான் கொடுக்கிறேன். உங்க ரேட்ட சொல்லுங்க முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்ல பண்ணிக்கலாம் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த பிரசாந்த், 2 லட்சம் வாங்குறேன், நாளைக்கு அனுப்பிவிடுங்க என்ன சொல்ல போகிறாய்க்கு நல்ல விமர்சனம் செஞ்சுடுறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full