பரியேறும் பெருமாள் பட வாய்ப்பால் நான் எதையும் இழக்கவில்லை, காரணம்- நடிகர் அதர்வா ஓபன் டாக்

By subhashini · 12/6/2025

பரியேறும் பெருமாள் பட வாய்ப்பு பற்றி நடிகர் அதர்வா கூறியிருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்இந்திய சினிமா திரை உலகில் 80, 90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் முரளி. இவரை அதிகம் ‘இதயம் முரளி’ என்று தான் அழைப்பார்கள். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவரின் மூத்த மகன் தான் அதர்வா. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சமீப காலமாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. இருந்தும் இவர் விடாமுயற்சியுடன் படங்களில் நடித்துக் கொண்டு வருகின்றார். அந்த வகையில் அதர்வா அவர்கள் அட்ரஸ், தானா உட்பட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' என்ற படத்தில் அதர்வா நடிக்கிறார். இதை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில்ஜெயம் ரவி, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அதர்வா திரைப்பயணம்:

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டிஎன்ஏ. இந்த படத்தை மான்ஸ்டர், பர்கானா படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிமிஷா சஜயன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் dna படக் குழுவினருடன் மாரி செல்வராஜ் கலந்து கொண்டிருந்தார். அப்போது விழாவில் பேசிய மாரி செல்வராஜ், நான் முதன் முதலில் பரியேறும் பெருமாள் கதையை அதர்வா ப்ரோவிடம் தான் சொன்னேன்.

மாரி செல்வராஜ் பேட்டி:

அது அவருக்கு நினைவு இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு முரளி சார் ரொம்ப பிடிக்கும். முரளி சாருடைய மகன் சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததுமே பானா காத்தாடி படத்தை பார்த்தேன்.
அதற்கு பிறகு தான் பரியேறும் பெருமாள் கதைக்குள் அவரை பொருத்திப் பார்த்தேன். முரளி சாருடைய மகன் நம்மைப் போலவே இருப்பார். அவர் இந்த ரோலுக்கு சரியாக இருப்பார் என்று நினைத்து தான் நான் அவரிடம் கதை சொன்னேன். அந்த சமயத்தில் அவரிடம் தேதிகள் கிடைக்கவில்லை. முரளி சாரோட மகன் பரியேறும் பெருமாள் கதையை செய்யவில்லை என்று அப்போது வருத்தப்பட்டேன்.

https://www.youtube.com/watch?v=Er8sPkLihV8

பரியேறும் பெருமாள்:

அதர்வா என்னை இயக்குனராக ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு யார் என்னை இயக்குனராக ஏற்றுக்கொள்வார்கள் என்றெல்லாம் நினைத்தேன். அவரை பார்க்கும் போது இந்த விஷயங்கெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏழு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அதர்வா ப்ரோவை நெருக்கமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்னும் உயரங்களுக்கு செல்லக்கூடிய ஆற்றல் அதர்வா ப்ரோவிடம் இருக்கிறது என்று கூறி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விழாவில் அதர்வா, கடந்த சதாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று. அந்த படத்தினுடைய வாய்ப்பை தவறவிட்டதால் நான் எதையும் இழக்கவில்லை என்று நினைக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=Moab8OQdZfs

அதர்வா கொடுத்த விளக்கம்:

காரணம், கதிர் ரொம்ப அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜிடம் வேறு ஏதேனும் கதை இருந்தால் அதில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். டிஎன்ஏ படத்தின் கதையை இயக்குனர் செல்வதற்கு முன்பு தயாரிப்பாளர் என்னிடம் போனில் சொல்லிவிட்டார். ஆனால், அப்போது படத்தினுடைய டைட்டில் என்ன? என்று கேட்கவில்லை. பின் இயக்குனர் கதை சொல்ல போகும்போதே டி.என்.ஏ என்று டைட்டிலை சொல்லிவிட்டார். டிஎன்ஏ என்றால் ஜெனிட்டிக் தொடர்பான சயின்டிஃபிக் பிக்ஷன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், அவர் டிஎன்ஏ என்றால் ஆனந்த்-திவ்யா என்று சொன்னார். இந்த படத்தினுடைய நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்குமே நன்றியை சொல்லிக் கொள்கிறேன். இந்த படத்தைப் பொறுத்தவரை மனைவி என்பவர் தன் கணவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையினால் எந்த அளவிற்கு தங்களின் அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பது தான் இந்த படம் சொல்கிறது என்று பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full