முதல் படத்தின் போது உறவினர்களே கிண்டல், கேலி செய்தார்கள்- வேதனையில் அதுல்யா ரவி சொன்ன தகவல்
உறவினர்களே கிண்டல் கேலி செய்தார்கள் என்று அதுல்யா ரவி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் அதுல்யா ரவி. இவர் கோயம்பத்தூரை சேர்ந்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான 'காதல் கண் கட்டுதே’ என்ற படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர். இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் அதிகம் இருக்கிறது.
அழகும், இளமையும், திறமையும் இருந்த இவருக்கு இளசுகள் மூலம் கிடைத்த பிரபலம் தான் சினிமாவில் அடுத்தடுத்தது வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
அதுல்யா ரவி திரைப்பயணம்:
அதிலும் இவர் நடித்த 'கேப்மாறி' படத்தில் கூட அம்மணி இரட்டை வசனத்தை பேசியதை கண்டு ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தார்கள். இது ஜெய் உடைய 25வது படமாகும். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அதுல்யா ரவி இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள் என்றே சொல்லலாம். இருந்தாலுமே இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் அதுல்யா ரவி நடித்திருந்தார்.
அதுல்யா ரவி நடிக்கும் படங்கள்:
இந்த படத்திலும் இவர் ஓவராக கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு சுமாரான விமர்சனங்களை கொடுத்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து இவர் வட்டம், அமலாபால் நடிப்பில் வெளிவந்த கடாவர் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவர் டீசல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டது.
அதுல்யா ரவி பேட்டி:
இருந்தாலும், படம் வெளிவரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அதுல்யா ரவி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் சினிமா உலகில் அறிமுகமான ஆரம்பத்தில் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் நான் படத்தில் நடிப்பதாக சொன்னேன். ஆனால், நான் சொன்ன படம் அப்போது வெளியாவதில் பல பிரச்சனைகள் வந்தது. இதனால் அவர்கள் எந்த தேதியில் உன்னுடைய படம் ரிலீஸ் ஆகும் என்றெல்லாம் கேட்பார்கள். நான் சொன்ன தேதியில் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.
சினிமா அனுபவம்:
நானுமே என்னுடைய நண்பர்கள், உறவினர்களிடம் எல்லாம் இன்று, நாளை ரிலீசாகும் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் அவர்கள், நீ படத்தில் நிஜமாகவே நடித்து இருக்கிறாயா? இல்லை சும்மாக கதை விடுகிறாயா? என்று கேட்டு கிண்டல் செய்தார்கள். அப்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு முறை இல்லாமல் பல முறை அந்த மாதிரி படம் வெளியாகாமல் தள்ளிக் கொண்டே இருந்தது. இதனால் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் கிண்டல் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப் பிறகுதான் அந்த படம் வெளியாகி எனக்கான அங்கீகாரம் கிடைத்தது. அப்போது எனக்கு இருந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறியிருக்கிறார்.