இது தான் அதுல்யா ரவியின் துபாய் பிரண்ட்டாம்.! வைரலாகும் புகைப்படம்.!
சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளனர். அந்த வகையில் காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாகநடித்திருந்தார். அந்த டீஸரில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டார் அதுல்யா.
தற்போது நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அதுல்யா அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
https://twitter.com/AthulyaOfficial/status/1092765879643881474
இந்நிலையில் அதுல்யா ரவி சுற்றுலாவில் உள்ளார்.
“தனது புதிய தோழி, இவளால் தனக்கு சிறு வயது நினைவுகள் மீண்டும் ஞாபகம் வந்தது. அவள் அவ்வளவு அழகு.” என ஒரு குழந்தயுடன் இருக்கும் போட்டோக்களுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.