அட்லீயின் 5வது படம் விஜய்யுடான ? அட்லீ பதிவிட்ட புகைப்படத்தால் குஷியில் ரசிகர்கள்.

By Rajkumar · 15/11/2019

அட்லி இயக்கத்தில் இயக்கத்தில் இளைய தபதி விஜய் நடிப்பில் தீபாவளி திருநாள் அன்று வெளியான பிகில் படம் உலகம் முழுவதும் பட்டைய கிளப்புகிறது. விஜய் ரசிகர்கள் "பிகில்" படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து திருவிழா போன்று கோலாகலமாககொண்டாடி வருகிறார்கள். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

https://twitter.com/Atlee_dir/status/1194942567068000256

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. பிகில் படம் 180 கோடி ரூபாய்க்கு மேல் தயாராகி இருக்கும் படம் என்று கூறப்படுகிறது. மேலும், வெளியான சில நாட்களிலேயே 250 கோடி ரூபாயை இந்த படம் வசூல் செய்தது. இது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு வெளிநாடுகளில் வெளியான தமிழ் படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் செய்திருந்தது.

படம் குறித்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். அதோடு பிகில் படம் பெரிய அளவு மாஸ் படமாக இருந்தாலும் அந்த படத்தில் சின்னச் சின்ன குறைகள் இருப்பதாகவும், கதையின் மீது ஒரு பிணைப்பு ஏற்படுத்தாமல் போய்க் கொண்டுள்ளது என்றும் கூறினார்கள். ஆனால், எமோஷன் காட்சிகள் படத்தில் பட்டையை கிளப்பியது என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

https://twitter.com/itz_chillax/status/1194964253897150464

இந்த நிலையில் அட்லீ சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் அட்லீ இருவரும் பிகில் 5 என்று அச்சிடபட்ட டி ஷர்ட்டையும் அணிந்திருக்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிங்கர்கள் பலரும் அடுத்த படமும் தளபதி உடன் தானா ? பிகில் 2 வா? என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர். இதனால் பிகில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

https://twitter.com/VishnuSelvaraj7/status/1194942830260547585

https://twitter.com/ThalaRajesh_/status/1194943722879741952

சமீபத்தில் இயக்குனர் அட்லி இடம் ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து கதை எடுப்பீர்களா! என்று கேட்டார்கள். உடனே அட்லி பிகில் படத்தில் விஜய் சொன்னது போலவே செய்திடலாம் என சிரித்துக்கொண்டே சொன்னார். அப்ப கூடிய விரைவில் ராயப்பன் கதாபாத்திரம் வைத்து அட்லீ படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full