நான் படங்களை காப்பி அடிச்சி எடுத்தேன்னு சொல்லுறாங்க, ஆனால் - இயக்குனர் அட்லீ ஓபன் டாக்
கோலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் ஆர்யா-நயன் நடித்த ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்திய அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
மேலும், இவர் இயக்கிய ஐந்தே படங்களிலேயே மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறார். இதை அடுத்து இவர் முதன் முதலில் ஹிந்தி படத்தை தயாரித்திருந்தார். தமிழில் அட்லீ இயக்கி, தளபதி விஜய் நடித்து பயங்கர ஹிட்டான ‘தெறி’ படத்தினுடைய இந்தி ரீமேக்கை தான் தயாரித்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து அட்லீ அவர்கள் அல்லு அர்ஜுனனை வைத்து படம் இயக்குகிறார். பீரியட் கதையை கொண்ட இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சென்னை சத்ய பாபா கல்லூரியில் இயக்குனர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அட்லீ திரைப்பயணம்:
விருதை வாங்கிய பிறகு நிகழ்ச்சியில் பேசிய அட்லீ, நான் எத்தனையோ மேடைகளை பார்த்திருக்கிறேன். எல்லோரும் சாதனைகளை பார்த்த பிறகும் அடுத்து என்ன என்ற கேள்வி தான் வரும். ஆனால், இந்த மேடையில் நான் முதன் முதலாக எமோஷனலாக உணர்கிறேன். நான் கல்லூரியில் உண்மையை பேசியதே கிடையாது. ஆனால், இன்று உண்மையை பேசும் சூழ்நிலை வந்திருக்கிறது. அதனால் பொய் சொன்னால் இறும்பி விடுவேன். நான் இந்த காலேஜில் பயங்கரமான மாணவன். ஊருக்கு யாராக இருந்தாலும் வீட்டுக்கு அரசனாக இருப்பான் என்று சொல்வார்கள். அப்படித்தான் நம் அம்மா நம்மை வீட்டுக்கு அரசராக பார்த்திருப்பார்கள்.
அட்லீ டாக்டர் பட்டம்:
என்னை இந்த காலேஜ் ஆரம்பத்திலிருந்து அரசனாக தான் பார்த்தது. மேலும், என்னுடைய படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் இன்னைக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். நான் என் வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களை தான் படமாக எடுத்தேன். உதாரணமாக ராயப்பன் என்னுடைய தலைவர் என் சான்ஸ்லர் ஜேப்பியார் சாரை பார்த்து இன்ஸ்பயர் ஆகி தான் எழுதினேன். காலேஜை விட்டு போகும்போது எதையுமே மிஸ் பண்ண கூடாது என்று நினைப்போம். ஆனால், நான் சொல்கிறேன் உங்களை மிஸ் பண்ணிடாதீங்க.
https://www.youtube.com/watch?v=SkBBzSmH6sQ
காப்பி சர்ச்சை:
உங்களுக்குள் இருக்கிற காலேஜ் பர்சனாலிட்டி மிஸ் பண்ணிடாதீங்க. வாழ்க்கையில் பெரிய வெற்றி நல்ல ஃபேமிலி மேன் ஆக இருப்பது தான். ஆயிரம் கோடி வசூல், இவரோட படம், அவரோட படம் பண்ணிட்டோம்
என்பது எதுவும் இல்லை. ரொம்ப முக்கியமானது நல்ல ஃபேமிலி மேன் ஆக இருப்பது தான். என்னுடைய அப்பா, அம்மா நான் இயக்குனராக ஆகிற வரை என்னை பார்த்துக் கொண்டார்கள். இயக்குனரில் இருந்து இப்ப என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் மனைவி தான் காரணம். அங்கிருந்து நான் ஒரு நல்ல மனிதனாக மாற என் மகன் காரணம். இவர்கள் நான்கு பேரும் மட்டும் என் குடும்பம் இல்லை. என் அண்ணன் தளபதி விஜய். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். என் குடும்பம் ரொம்ப பெருசு.
தனிப்பட்ட வாழ்க்கை:
வாழ்க்கையில் உங்கள் குடும்பத்தோட அளவை ரொம்ப பெருசாக்கி கொள்ளுங்கள். ஒரு குட்டி கதையோட முடிக்கிறேன். ஒரு கோவிலில் உள்ளே சிலையும், வெளியே படிக்கட்டுமிருந்தது. எல்லோரும் படிக்கட்டையை மிதித்து நடந்து சிலையை வணங்கினார்கள். கோவில் பூட்டிய பிறகு படிக்கட்டு, நீயும் கல்தான். நானும் கல்தான். ஏன் என்னை மிதித்து செல்கிறார்கள்? உன்னை வணங்குகிறார்கள் என்று கேட்டதாம். அதற்கு சிலை, உன்னை இரண்டு பக்கமும் வெட்டி படிக்கட்டாகி விட்டார்கள். என்னை ஆயிரம் பேர் வைத்து சுத்தியில் செதுக்கி சிலையாக்கி இருக்கிறார்கள். அதனால் எனக்கு கூடுதல் மரியாதை இருக்கு என்றதாம். இப்படி உங்களை இன்று நிறைய பேர் சுத்தியால் அடித்தால் நீங்கள் நாளைக்கு பெரிய ஆளாக வருவீர்கள் என்று கூறியிருக்கிறார்.