அருண்குமார் எப்படி அட்லீ ஆனார் தெரியுமா? அதற்கு இதான் அர்த்தமாம். அட்லீயே சொன்ன காரணம்.

By subhashini · 22/12/2023

அட்லீயின் பெயர் வந்ததற்கான உண்மையான காரணம் குறித்து பேட்டியில் இயக்குனர் அட்லி கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதனை அடுத்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் விஜய்யை சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார்.

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்திய அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. இப்படி இவர் இயக்கிய ஐந்தே படங்களிலேயே மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறார். இதற்கு காரணம் இவருடைய கடுமையான உழைப்பும் முயற்சியும் தான்.

அட்லீ பேட்டி:

இந்த நிலையில் அட்லியின் உண்மையான பெயர் குறித்து பேட்டியில் கூறியிருப்பது, என்னுடைய பெயர் அருண் குமார். என் பெரியப்பா ஜட்ஜ் ஆக இருந்தார். வீட்டில் எல்லோருக்குமே செல்ல பெயர் வைப்பார்கள். அப்படி அவர் எனக்கு வைத்த பெயர்தான் அட்லீ. கிளமெண்ட் அட்லீ ஞாபகம் ஆக தான் அவர் என்னை அட்லீ என்று கூப்பிட்டார். அது நம்ம ஊரு இட்லி வார்த்தைக்கு கனெக்ட் ஆக இருக்க என்னை எல்லோருமே அப்படியே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

அட்லீ பெயர் காரணம்:

வீட்டில் கூட அருண் என்ற என்னுடைய பெயரை விட்டுவிட்டு அட்லீ என்றுதான் கூப்பிடுவார்கள். என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே என்னை அப்படியே கூப்பிட ஆரம்பித்தார்கள். எங்கள் ஊர், ஏரியாவில் யார் கேட்டாலும் என்னை அட்லி என்று தான் தெரியும். அருண்குமார் என்ற பெயர் என்னுடைய ஸ்கூல் ரெக்கார்டுகளிலும், அரசு சான்றிதழ்களில் மட்டும் தான் இருக்கும். என்னுடைய முதல் ஷார்ட் பிலிம் எடுத்தபோது அதில் நான் அருண்குமார் என்று போட்டேன்.

அட்லீ அம்மா சொன்னது:

அதை என்னுடைய அம்மாவிடமும் காண்பித்தேன். அதற்கு என்னோட அம்மா, ஏன் அருண்குமார் என்று போடுகிறார்? அட்லீன்னு போடு, அப்படித்தானே நாங்கள் எல்லோரும் உன்னை கூப்பிடுகிறோம். உன்னுடைய கிளாசில் அருண்குமார் என்று மூன்று பேர் இருக்காங்க. நிறைய பேரோட பெயர் அருண்குமார் தான் இருக்கும். அதனால் நீ அட்லி என்று போடு என்று சொன்னார். அவர்கள் சாதாரணமாகத்தான் சொன்னார்கள். நானும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அந்த ஷார்ட் பிலிம் நேஷனல் லெவலில் விருது கிடைத்தது.

அட்லீ புது படம்:

அந்த எமோஷனல் அப்படியே எனக்கு சென்டிமெண்டாக மாறி அதே பெயரை நான் வைத்துக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது அட்லீ அவர்கள் புது கதை ரெடி பண்ணி கொண்டு இருக்கிறார். அதில் தளபதி விஜய்- ஷாருக்கான் இருவரையும் இணைத்து படம் எடுக்க போவதாக கூறி . இதற்கு விஜய்-ஷாருக்கான் இருவருமே ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full