கார் ரேஸில் கூட அவ்வளவு வரல. ஆனால், இதுல வாரமே இவ்ளோ வருமானம் வருது - ஆபாச நடிகையாக மாறிய கார் ரேஸ் வீராங்கனை.

By Rajkumar · 11/6/2020

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவால் ஸ்தம்பித்து போய் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரபல கார் பந்தய வீராங்கனை ஒருவர் வருமானம் இல்லாததால் ஆபாச பட நடிகையாக களம் இறங்கி உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் மிக பிரபலமான வி8 சூப்பர் கார் பந்தய வீராங்கனை ரெனி கிரேசி. இவர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த வர். இவர் வி8 சூப்பர் கார் பந்தயங்களில் போட்டியை முழுமையாக நிறைவு செய்த முதல் பெண் ஆவார். இவர் கார் பந்தயங்களில் இருந்து விலகி தற்போது ஆபாச படங்களில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் எதிர்கால போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டது.

கார் பந்தயங்களில் வருவாய் இல்லாததால் வாழ்கை நடத்துவது மிகவும் கஷ்டமாக மாறிவிட்டது. மேலும், சமீபத்தில் ரெனி அவர்கள் சர்வதேச பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, பொருளாதார நெருக்கடியே எனது இந்த முடிவுக்கு காரணம். எனது குடும்பத்தாருடன் இது தொடர்பாக விவாதித்தும், அவர்களின் ஒப்புதலுடன் தான் இந்த முடிவுக்கு வந்தேன். கார் பந்தயங்களில் இதுவரை நான் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

ஆனால், தற்போது வாரத்திற்கு 25,000 டாலர் வரை என்னால் வருவாய் ஈட்ட முடிகிறது. மாதம் 65,000 டாலர் முதல் 90,000 டாலர் வரை நான் வருவாய் ஈட்டி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். ரெனி கிரேசி ஆபாச படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது இணையதள பக்கத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full