பிரம்மாண்டமாக வந்த 'அவதார் 3 : தீ மற்றும் சாம்பல்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
உலகம் முழுவதும் பிரம்மிக்க வைத்த படங்களில் ஒன்று அவதார். இந்த படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை இயக்கி இருந்தார். மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து 13 வருடங்களுக்குப் பின் இரண்டாம் பாகம் வந்தது. தற்போது நெருப்பு நிலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
நாவினத்தினுடைய தலைவனாகவும், நான்கு பிள்ளைகளின் அப்பாவாகவும், தனது மனைவி நெய்டிரியுடன் சேர்ந்து சந்தோஷமாக கதாநாயகன் ஜேக் வாழ்ந்து வருகிறார்.இந்த சமயத்தில் மீண்டும் பண்டோராவில் மனிதர்களுடைய கால் தடம் படுகிறது. இந்த முறை பண்டோராவில் புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்று ராணுவம் மிகப்பெரிய படையுடன் புறப்பட்டு வருகிறது. இவர்களுக்கு Colonel Quaritch உதவுகிறார். முதல் பாகத்தில் மனிதனாக இறந்து போன Colonel Quaritch தன்னுடைய நினைவுகளை சீப் மூலம் ஸ்டோர் செய்து நாவி உடலில் புகுந்து மீண்டும் கதாநாயகன் ஜேக்கை பழிவாங்க வருகிறார்.
இரண்டாம் பாகத்தில் Colonel Quaritch தன்னுடைய வீரர்களுடன் ஜேக் குடும்பத்தை அழிக்க வருகிறார். தனது குடும்பத்தை காப்பாற்ற ஜேக் கடல்வாசி நாவிகளிடம் தஞ்சம் கேட்டு செல்கிறார். இருந்தும் வில்லன் Colonel Quaritchயிடம் ஜேக் குடும்பத்தின் சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். ஜேக் தைரியத்துடன் Colonel Quaritchயை எதிர்த்து போராடி தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினார். மேலும், அவதார் 2 விட்ட இடத்தில் இருந்தே படம் துவங்குகிறது. ஜேக் தன் குடும்பத்தை காப்பாற்ற நாவி பகுதிக்குள் தங்குகிறார். அங்கு ஜேக் இளைய மகன், தன் அண்ணன் இழந்த சோகத்தில் இருக்கிறார்.
ஸ்பைடர் மனிதன், அவனால் இந்த உலகில் வாழ முடியாது அவனை மனிதர்கள் வாழும் பகுதியில் விட வேண்டும் என்று ஜேக் குடும்பத்துடன் வான்வழி பயணத்தில் பறக்கிறார். அப்படி பறக்கும் போது சாம்பல் பகுதியை சேர்ந்த நெருப்பை வைத்து ஆட்சி செய்யும் ஒரு கூட்டம் இவர்களை தாக்குகிறது. அந்த மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு ஜேக் மீண்டும் தன் குடும்பத்துடன் இணைகிறார். ஆனால், ஸ்பைடர் மூச்சு விட முடியாமல் திணறுகிறார். அந்த நேரத்தில் கிரி ஏவாவை வணங்கி வேர்கள் மூலம் ஸ்பைடர் இந்த உலகிலேயே சுவாசிக்க வைக்கிறார்கள்.
இந்த உண்மையை அறிந்த கேனல் மைல்ஸ், சாம்பல் பகுதி ராணியின் உதவியுடன் ஸ்பைடரை கைப்பற்றுகிறார். ஸ்பைடரை ஆராய்ச்சி செய்தால் சாதாரண மனிதர்களும் இங்கு வந்து வாழ தொடங்கி விடுவார்கள். இது நடக்கக்கூடாது என ஜேக் பெரும் படையுடன் அவர்களை எதிர்த்து நிற்கிறார். இறுதியில் ஜேக் வெற்றி கண்டாரா? என்பதுதான் மீதி கதை. படத்தின் ஹீரோ ஜேம்ஸ் கேமரூன், அவதாருக்காகவே தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டு வருகிறார். படத்தின் டெக்னாலஜி பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.
விசுவலாக படம் சூப்பரா இருக்கிறது. ஆனால், கதையில்தான் பெரிதாக சுவாரஸ்யம் இல்லை. வழக்கம்போல மூன்று பாகங்களும் யாராவது ஒருவர் இவர்களை எதிர்க்கிறார்கள்.
இவர்கள் அவர்களை எதிர்த்து தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றினார்கள். இதுதான் கொஞ்சம் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்திற்கு பெரிய பலமே விசுவல் காட்சிகள் தான். சில சண்டை காட்சிகள் சூப்பராக இருந்தாலும் கடைசியில் என்னடா இது என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. படத்தின் முதல் பகுதி பொறுமையாக செல்கிறது. படத்தின் நீளமும் அதிகமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் பிரம்மாண்ட சண்டை காட்சிகள் நன்றாக இருக்கிறது. முதல் இரண்டு பாகத்தைப் போலவே இந்த படமும் பிரம்மாண்டமாக இருந்தாலும் கதை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார்.
நிறை:
டெக்னிக்கல் ஓகே
வில்லன் கதாபாத்திரம் மிரட்டி இருக்கிறது
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நன்றாக இருக்கிறது
விஷுவல் காட்சிகள் பிரம்மாண்டம்
குறை:
படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்
முதல் பாதி பொறுமையாக சொல்கிறது
கதையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வித்தியாசம் எதுவும் இல்லை
மொத்தத்தில் அவதார் 3 - உச்சத்தை பிடிக்க தடுமாறுகிறது.