7 வயதில் அவ்வை சண்முகி படத்தில் நடித்த பொண்ணா இது. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

By Rajkumar · 5/5/2020

கெத்து காட்டும் ஹீரோக்கள், க்யூட் ரியாக்‌ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களைத் தாண்டி சில ஃப்ரேம்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட்சத்திரங்கள். பெருசுகளையே கலாய்க்கும் கவுன்ட்டர் டயலாக்காக இருந்தாலும் சரி, பார்க்கும் எல்லாரையும் கண் வியர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி, அடடே இந்தச் சுட்டி செமையா நடிக்குதே!' என நம்மை ஓ போட வைத்த அவ்வை ஷண்முகி பட குழந்தை நட்சத்திரம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என ரிவர்ஸ் கியர் போட்டுப் பார்ப்போம்.

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் எப்போதும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுப்பார். அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் "அவ்வை சண்முகி" இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.

இதையும் பாருங்க : சீரியல் பல்ப், சவுண்ட் சிஸ்டம், ஆட்டம் என்று பார்ட்டி கொண்டாடிய அமலா பால். வீடியோ இதோ.

இந்த படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.இந்த படத்தில் பளீர் வெள்ளை நிறம், பால் நிற சிரிப்பு என உலக நாயகனின் மகளாய் அசரடித்த குட்டி தேவதைதான் தற்போது அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்டார். அவ்வை ஷண்முகி படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஏனோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

இதையும் பாருங்க : இவர் தான் அடுத்த அனிதா சம்பத்தா. படு மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்த செய்தி வாசிப்பாளர்.

பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது எனத் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர் இப்போது மாடலிங்கில் பிஸி. மேலும், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்ஸ் ஆக்டர்(ex - actor?)அதாவது முன்னாள் நடிகர் என்று தனது சுய விவரத்தில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இவரது புகைப்படத்தை காணும் போது இவரா அவ்வை ஷண்முகி படத்தில் நடித்த குட்டி பொண்ணு என்ற வியப்பே ஏற்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full