அயலியின் அம்மாவாக நடித்த குருவம்மாவா இது ? வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்.

By Manikandan · 14/2/2023

உலகத்தை கொரோன தாக்கியதில் இருந்து சமீப காலமாக அதிக ஓடிடி தொடர்கள் வந்த வன்னமாறு இருக்கிறது. அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பெற்றுருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில், குஷிமாவதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இணைய தொடர் தான் அயலி. இத்தொடரில் அபிநயஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்திலும், அருவி மதன், அன்மோல், லிங்கா, சிங்கம்புலி, காயத்ரி, தர மெலோடி, பிரகஹீஸ்வரன், TSR சரினிவாசமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

கதைக்களம் :

இந்த கதையில் நடப்பவை 90களில் நடக்குமாறு காட்டப்படுகிறது, பெண்கள் வயதிற்கு வந்தபின் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் சாமிக்குதாம் வந்துவிடும் என நம்பும் வீரப்பண்ணை ஊரில் எந்த பெண்ணாலும் 9ஆம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியவில்லை, அந்த சூழ்நிலையில் 8ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் அபிநயஸ்ரீ, இவருக்கு நன்றாக படித்து மருத்துவராகவேண்டும் என்று ஆசை இதனால் தான் வயதிற்கு வந்ததை தன்னுடைய அம்மாவை தவிர யாரிடமும் சொல்லவில்லை. இப்படி மிகக்கடுமையாக மூட நம்பிக்கைகளை நம்பும் ஊரில் அதுவும் 90ஸ் காலங்ககளில்அந்த பெண் டாக்டர் படித்தாரா? அவரது செயல்பாடுகள் கிராமத்தின் மூட நம்பிக்கையை மாற்றியதா என்பதுதான் மீதி கதை.

கிராமத்து பெண்ணாக நடிகை அனுமோல் :

பெண்கள் சுதந்திரம் பற்றி பேசிய இப்படம் கடந்த மாதம் 26தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு இப்படத்தில் நடித்த அணைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தனர். அந்த வகையில் தமிழ் செல்வியின் அம்மாவாக நடித்த மலையாள நடிகை அனுமோல் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சொல்லப்போனால் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம்.

அனுமோல் பற்றிய தகவல் :

நடிகை அனுமோல் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர், இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான "கண்ணுக்குள்ளே" என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். பின்னர் இவரின் மெகரூபன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நுழைந்த இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் வெளியான "அயலி" படத்தில் கதாநாயகியின் அம்மா குவம்மாவாக நடித்திருந்தார்.

வைரலாகும் புகைப்படங்கள் :

மிகச்சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை அனுமோல். இவர் சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இந்த "அயலி" இனைய தொடரின் மூலம் தான் பிரபலமானார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது அனுமோல் 10க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full