உலகத்தை கொரோன தாக்கியதில் இருந்து சமீப காலமாக அதிக ஓடிடி தொடர்கள் வந்த வன்னமாறு இருக்கிறது. அவற்றில் பல மாபெரும் வெற்றியும் பெற்றுருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில், குஷிமாவதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இணைய தொடர் தான் அயலி. இத்தொடரில் அபிநயஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்திலும், அருவி மதன், அன்மோல், லிங்கா, சிங்கம்புலி, காயத்ரி, தர மெலோடி, பிரகஹீஸ்வரன், TSR சரினிவாசமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பெண்களுக்கு எதிரான அடிமைத்தனத்தை பற்றி பேசும் இனைய தொடராக உருவாக்கி இருக்கிறது.

கதைக்களம் :

இந்த கதையில் 90களில் நடக்குமாறு காட்டப்படுகிறது, பெண்கள் வயதிற்கு வந்தபின் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் சாமிக்குதாம் வந்துவிடும் என நம்பும் வீரப்பண்ணை ஊரில் எந்த பெண்ணாலும் 9ஆம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியவில்லை, அந்த சூழ்நிலையில் 8ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் அபிநயஸ்ரீ, இவருக்கு நன்றாக படித்து மருத்துவராகவேண்டும் என்று ஆசை இதனால் தான் வயதிற்கு வந்ததை தன்னுடைய அம்மாவை தவிர யாரிடமும் சொல்லவில்லை.

Advertisement

இப்படி மிகக்கடுமையாக மூட நம்பிக்கைகளை நம்பும் ஊரில் அதுவும் 90ஸ் காலங்ககளில் அந்த பெண் டாக்டர் படித்தாரா? அவரது செயல்பாடுகள் கிராமத்தின் மூட நம்பிக்கையை மாற்றியதா என்பதுதான் மீதி கதை. இந்த படம் கடந்த கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி பட்ட நிலையில் தான் இந்த இனைய தொடரில் நடித்த நடிகர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்

எங்கள் ஊரில் நடக்கிறது :

அப்போது இந்த படத்தில் நடத்தவாறு ஏதாவது உங்களுடைய வாழக்கையில் நடந்திருக்கிறதா என்ற கேள்வி கேட்பக்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர்கள் “நான் பார்த்தும் இருக்கிறேன், கேள்வியும் பட்டிருக்கிறேன். பல இடங்களில் இந்த மாதிரியான விஷியங்கள் நடக்கிறது. மேலும் என்னுடைய ஊரில் கூட இப்படியொரு தேவையில்லாத கலாசாரம் சென்று கொண்டுதான் இருக்கிறது. எனக்கே சொல்லப்போனால் 7ஆம் வகுப்பில் இருந்து பெண் பார்க்க தொடங்கினார், ஆனால் அதிலிருந்து நான் மீண்டு வந்துவிட்டேன்.

Advertisement

11 வயது பெண்ணிற்கு நடந்தது :

தற்போது எனக்கு இப்போது 30 வயதாகிறது இருந்த போதிலும் எனக்கு எப்போது திருமணம் ஆக விருப்பம் உள்ளதோ அப்போதுதான் திருமணம் செய்து கொள்வேன். என்னுடைய ஊரில் ஒரு பெண்ணிற்கு 11 வயதில் திருமணம் நடந்தது. அந்த பெண்ணை மாமனார் இடுப்பில் தூக்கிவந்தார். மேலும் என்னுடைய பயணத்தின் போது பல பெண்களை இது போன்று பார்த்திருக்கிறேன் என்று கூறினார். அப்படி பட்டவர்கள் இந்த படத்தை பார்த்தாவது திருந்தட்டும் எனக் கூறினார்.

Advertisement

மேலும் இப்படத்தின் கதாநாயகி பேசுகையில் இந்த படத்தில் வருவது போல என்னுடைய பாட்டி சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இது இப்போதும் கூட சென்னயில் நடக்கிறது என்று இயக்குனர் முத்துகுமார் அவர்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும் என்று கூறினார். தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் கூட குழந்தை திருமணமும், இது போன்ற விஷியங்களும் தமிழ் நாட்டில் அதிக இடங்களில் அரங்கேறுகிறது என்பதனை நாம் மறுக்க முடியாது.

Advertisement