இரண்டு முறை காதல் தோல்வி.! ஆனால், டேட்டிங் செல்ல வேண்டும்னா அது இவருடன் தான்.!

By Rajkumar · 18/2/2019

சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தலும் “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. மேலும் கடந்த ஆண்டின் டாப் 30 விரும்பத்தக்க நடிகைகள் பட்டியலில் இவர் தான் முதல் இடம் பிடித்திருந்தார்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது இளமை கால காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்”நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒருவரை உண்மையாக காதலித்தேன், ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார்.கண்டிப்பாக அவர் தற்போது பீல் செய்வர் “என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.

அதன்பின் நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை 6 வருடங்களாக காதலித்து வந்தேன். ஆனால் உங்களுக்கே தெரியும் இந்த சினிமா உலகில் எவ்வளவு பிரச்சனைகள் வரும் அதே போல எங்களுக்குள் சில கருத்து வெறுபாடுகள் ஏற்பட்டு நாங்களே எங்கள் காதலுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டோம்.இந்த இரண்டு நபருக்கு பிறகு நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் டேட் செல்ல விரும்பினால் எந்த நடிகருடன் செல்வீர்கள் என்ற கேள்வி ஐஸ்வர்யா ராஜேஷிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட் பெயரை கூறியுள்ளார். சுஷாந்த் சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் ஹீரோவாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full