ஓராண்டு கழித்து மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா.

By ·

சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார். பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார்.

மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில் சீரியலில் நடித்து இருந்தார்.

பின் சன் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இறுதியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ஆயுத எழுத்து ' சீரியலில் நடித்து வந்தார். ஆனால், கடந்த ஆண்டு 'ஆயுத எழுத்து' சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வேறு எந்த சீரியலிலும் பார்க்கமுடியவில்லை.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆயுத எழுத்து சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் சரண்யா இப்போது புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி நடிக்க தொடங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் அந்த சீரியலின் புரொமோ ஷுட் அண்மையில் நடந்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full