அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? கண்ணீரில் அரங்கம்
சமீப காலமாக மக்களின் வைரலாகி பிரபலமான சேனலாக விஜய் டிவி திகழ்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதனாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி பார்க்கும் சேனலாக விஜய் டிவி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து தான் செல்கிறார்கள். மேலும், வருடம் வருடம் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது.
ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் விருது விழா கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டும். விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விழா கூட சிறப்பாக நடந்து இருந்தது. மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் இந்த வருடம் 10வது விஜய் டெலிவிஷன் விருதுகள் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. அதில், பைண்ட் ஆப் தி இயர்- அய்யனார் துணை சீரியலில் சோழனாக நடிக்கும் அரவிந்த் விருது வாங்கி இருக்கிறார். அப்போது இந்த விழாவில் அரவிந்த் குறித்து ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், சினிமா கனவோடு அரவிந்த் சென்னைக்கு வந்தார். அப்போது அரவிந்த் உடைய பெற்றோர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் இறந்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=bfyn8p-ZPr4
அரவிந்த் பட்ட கஷ்டங்கள்:
அதற்குப் பிறகு கஷ்டங்களை அனுபவித்து போராடி தான் அரவிந்த் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இதை சொல்லும் போதே அரவிந்த் எமோஷனலாக அழுதுவிட்டார். பின் அந்த விருதை வாங்கிய பிறகும் அரவிந்த் ரொம்ப எமோஷனல் பேசி இருந்தார். அரவிந்த் வாழ்க்கைக்கு பின் இப்படி ஒரு சோகம் இருப்பது பலருக்குமே தெரியாது. மேலும், கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் அரவிந்த்.
அய்யனார் துணை சீரியல்:
அதற்குப் பிறகு இவருக்கு பெரிதாக சீரியல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்புதான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்த தொடர் ஒருவருப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாகவும் மக்கள் மத்தியில் வரவேற்கப்பற்றும் வருகிறது.