மனோகருக்கு டிமிக்கி கொடுத்த நிலா-சோழன், சந்தோஷத்தில் மொத்த குடும்பம் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இந்த சீரியலில் ஹீரோ சோழன் அப்பா, அண்ணன், தம்பிகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வீட்டில் எல்லோரும் ஆண்கள் இருப்பதால் யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். பின் சோழன், வாடகைக்கு செல்லும் இடத்தில் தான் ஹீரோயினி நிலாவை பார்க்கிறார். நிலாவின் வீட்டில் அவருக்கு விருப்பமே இல்லாமல் திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதனால் சோழனின் உதவியோடு அந்த திருமணத்திலிருந்து நிலா தப்பித்து விடுகிறார். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் நிலா- சோழன் இருவருக்குமே ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகிறது.
அதோடு ஒருதலையாக நிலாவை சோழன் காதலிப்பதால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். மற்றவர்களுக்கு அது திருமணம் என்றாலும் நிலாவை பொருத்தவரை அது பொய் திருமணம் என்று நினைத்துக் கொள்கிறார். பின் நிலா, சோழன் வீட்டிற்கு வருகிறார். சோழன் வீட்டில் அவருடைய அண்ணன் சேரன், தம்பிகள் பாண்டியன், பல்லவன் எல்லோருமே நிலாவை அன்பாக பார்த்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் நிலாவிற்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் காட்டும் பாசத்தால் நிலாவும் அங்கேயே தங்கி விடுகிறார்.
அய்யனார் துணை:
அதோடு நிலா, சீக்கிரமாகவே விவாகரத்து வாங்கி கொண்டு தன்னுடைய கேரியரை பார்க்கணும் என்று போராடுகிறார். சோழன், எப்படியாவது நிலா மனதை மாற்றி விடலாம் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். இன்னொரு பக்கம் எப்படியாவது தன் மகளை வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று நிலாவின் அப்பா சோழனின் வீட்டிற்கு சென்று டிராமா போடுகிறார். அதை நம்பிய சோழன், நிலா இருவரும் சென்னை செல்கிறார்கள். வீட்டுக்கு போற பிறகுதான் நிலா அப்பா நாடகமாடுகிறார் என்று சோழனுக்கு தெரிகிறது. இருந்தாலும், நிலாவிற்காக பொறுத்துக் கொள்கிறார் சோழன்.
இன்றைய எபிசோட்:
பின் நிலாவின் அப்பா ரொம்ப அவமரியாதையாக சோழனை நடத்துகிறார். இருந்தாலுமே அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் சோழன் கையில் நகை, பணத்தை கொடுத்து பேங்கில் வைக்க சொல்லி நிலா அப்பா அனுப்புகிறார். நிலாவும் தன் தந்தை மாறிவிட்டார் என்று நினைத்து கொள்கிறார். பின் நகை, பணத்தை சோழன் எடுத்து செல்லும் வழியில் ஆட்கள் வைத்து திருட வைக்கிறார் நிலா அப்பா. அதோடு சோழனையும் கடத்தி வைத்து விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் சோழன் நகையை திருடி சென்று விட்டான் என்று பழி போடுகிறார் நிலா அப்பா மனோகர். ஆனால், அதை நிலா நம்பவில்லை. பின் நிலா, சேரனுக்கு போன் செய்து தகவலை சொல்கிறார். பின் சேரன், பாண்டியன், பல்லவன் மூவரும் சோழனை தேடி சென்றார்கள். ஒரு கட்டத்தில் சோழனை கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது நிலாவின் அப்பா தான் என்றும் தெரிந்து விடுகிறது. வீட்டிற்கு வந்த சோழன், அவருடைய அண்ணன், தம்பிகள் எல்லோருமே நிலாவிடம் நடந்ததை செல்கிறார்கள்.
இதனால் கொந்தளித்த நிலா தன்னுடைய அப்பாவை திட்டி விட்டு அங்கிருந்து சோழன் மற்றும் அவருடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
https://www.youtube.com/watch?si=tuZgK9rGbiPyEYUI&v=gAfvmM9lloU&feature=youtu.be
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சோழனின் வீட்டிற்கு வந்த எல்லோருமே நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சோழன், அதெல்லாம் உண்மையான நகையா? என்று கேட்கிறார். அதற்கு நிலா, ஆமாம் அதெல்லாம் உண்மையான தங்கம் என்று சொல்கிறார். உடனே சோழன், நான் அதிலிருந்து ரெண்டு ஆட்டையை போட்டு விட்டேன் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். பின் நிலா, நானும் அங்கிருந்து ஒன்றை திருடி விட்டேன் என்று தன்னுடைய ஆதார் கார்டை காண்பிக்கிறார். இதனால் மொத்த வீடுமுமே சந்தோஷமாக இருக்கிறது.