ஆபிசில் ரகளை செய்த சோழன், கோபத்தில் வெளுத்து வாங்கிய நிலா - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 18/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா வேலைக்கு தயாராகி கிளம்பினார். அப்போது சேரன், நிலா முதல் நாள் வேலைக்கு போவதால் வீட்டில் பொங்கல் செய்து தந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலா வேலைக்கு செல்வதால் சந்தோஷமாக தங்களால் முடிந்த கிப்டுகளை கொடுத்தார்கள். பல்லவன் பட்டாசு வெடிவைத்து கொண்டாடி இருந்தார். பல்லவனின் அப்பா, தன் மருமகள் வேலைக்கு போவதால் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார். நேற்று எபிசோட்டில் நிலா, முதல் நாள் ஆபிஸ்க்கு சென்றதால் அங்குள்ள கம்பெனியின் ஓனர் கேக் வெட்டி செலபிரேட் செய்தார்.

பின் கம்பெனியில் நிலாவிற்கு தோழி கிடைத்து விட்டார். நிலா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் பல்லவனின் அம்மாவை பார்த்து அதிர்ச்சி ஆனார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம், முதல் நாள் வேலையை பற்றி விசாரித்தார்கள். அதற்குப்பின் நிலா, நடேசன் இடம் பல்லவனின் அம்மாவை பற்றி விசாரித்தார். ஆனால், அவர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். உடனே நிலா, நான் பல்லவன் அம்மாவை சென்னையில் பார்த்தேன் என்று சொன்னவுடன் நடேசன் ஷாக் ஆனார்.

அய்யனார் துணை:

நிலாவிற்காக சேரன் பாத்ரூம் கட்டுவதற்கான வேலைகள் எல்லாம் தங்களுடைய வீட்டிற்கு பின்னாடி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நடேசன் அண்ணா பிரச்சினை செய்தார். கேஸ் நடக்கும்போது இந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது. நான் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்றெல்லாம் மிரட்டி இருந்தார். இதனால் கோபப்பட்ட நடேசன், தன்னுடைய அண்ணனை தனியாக அழைத்து சென்று, நீ பிரச்சனை செய்யாமல் அமைதியாக இருந்தால் நானும் எதுவும் பண்ண மாட்டேன்.

கடந்த வாரம் எபிசோட்:

இப்படியே திருமணத்திற்கு முன் உன் மகள் என்னுடைய வீட்டிற்கு வந்த விஷயத்தை எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் சொல்லி விடுவேன் என்றார். இதை கேட்டு நடேசன் அண்ணன் எதுவுமே பேசாமல் அமைதியாக சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு டிசைனை வரைந்து கொண்டு போய் கொடுத்தார். அதை பார்த்த மேனேஜர், இதை செய்ய இவ்வளவு நேரமா? ஒழுங்காகவே இல்லை என்று திட்டினார். இதனால் நிலாவுக்கு கஷ்டமாக இருந்தது. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, பாத்ரூம் கட்டும் விஷயத்தை அறிந்து சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது மேனேஜர் வேறொரு நபரை திட்டுகிறார். அந்த சமயம் பார்த்து நிலாவிற்கு சோழன் போன் செய்கிறார். நிலாவை தான் மேனேஜர் திட்டுகிறார் என்று தவறாக புரிந்து கொண்ட சோழன், ஆபிசுக்கு வந்து பிரச்சனை செய்கிறார். இதனால் மேனேஜர்- சோழன் இடையே வாக்குவாதம் நடக்கிறது. பின் அந்த இடத்திற்கு வந்த ஓனர் சண்டையை நிறுத்தி சோழனை வெளியே அனுப்பி விடுகிறார். சோழன் செய்த தவறுக்காக நிலா மன்னிப்பு கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வானதி தன்னுடைய வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது என்று பாண்டியனிடம் காலேஜில் விட சொல்கிறார். பாண்டியன் முதலில் மறுத்தாலும் பின் ஏதேதோ பேசி வானதி அழைத்து செல்கிறார்.
இருவரும் ரொம்ப ரொமான்ஸ் ஆக பேசிக்கொண்டு செல்கிறார்கள். பின் நிலா வீட்டிற்கு வருகிறார். அப்போது சோழன், ஆபீஸில் உங்களிடம் யாரும் வம்பிழுக்க மாட்டார்கள் என்று பேசுகிறார். உடனே கோபத்தில் நிலா, உங்களுக்கு அறிவில்லையா? யாரைக் கேட்டு என்னுடைய ஆபீசுக்கு வந்தீர்கள்? நீங்கள் யார் என்றெல்லாம் என்று நடந்ததை சேரனிடம் சொல்கிறார். நிலா திட்டியதால் சோழனால் எதுவும் பேச முடியவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சோழன் செய்ததை தான் தவறு என்பது போலவே பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full